“ஐஎன்எஸ் விசாகப்பட்டனம் " (INS Visakhapatnam ) மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜநாத் சிங் முன்னிலையில் இந்திய கப்பற் படையில் 21-11-2021 அன்று இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள,
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு கப்பற்படையில் இணைக்கப்படவுள்ள ஏவுகணையை அழிக்கும் திறனுள்ள நான்கு விசாகப்பட்டினம் கப்பல்களில் முதலாவது கப்பல் முறைப்படி இணைக்கப்பட்டிருப்பதை இந்த நிகழ்வு குறிக்கிறது.
- ஏவுகனையைத் தாக்கி அழிக்கும் இதில் நவீன ஆயுதங்களும் நவீன ராடார்களை கொண்ட உணர்வுக் கருவிகளும் இடம்பெற்றிருக்கும். ஐஎன்எஸ் விசாகப்பட்டனம், P15B ராடார் பார்வையில் படாமல் ஏவுகணையை அழிக்கும் திறன்கொண்டது.
- ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 7400 டன் எடை கொண்ட இது மிகவும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாக கருதப்படும். மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.