பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜெயா ஜெட்லி தலைமையில் நிதி ஆயோக் அமைத்த சிறப்புக்குழுவின் (Jaya Jaitly Committee) பரிந்துரைகளை ஏற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயா ஜெட்லி குழு : பெண்களின் தாய்மையின் வயது, தாய் இறப்பு வீதத்தைக் (Maternal Mortality Rate (MMR)) குறைப்பதற்கான தேவைகள், ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்ய 4 ஜூன் 2020 அன்று ஒரு பணிக்குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளின் படியே, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.