மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசை வென்றதன் மூலம் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும் கார் பரிசை பெற்றார். 19 காளைகளை அடக்கிய முருகன் 2வது இடமும், 12 காளைகளை அடக்கி பரத் குமார் 3வது இடமும் பெற்றனர்.