சுற்றுச்சூழல் சாதனையாளர் - வினிஷா உமாசங்கர்

TNPSCPortal.In

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டத்தின் (12-15 ஜனவரி 2022) மாற்றத்தை உருவாக்குபவராக (“சேஞ்ச்மேக்கர்”)  தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி வினிஷா உமாசங்கர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனால் (என்ஐஎஃப்) நிறுவப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இக்நைட் விருதை, சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்தும்  நடமாடும் இஸ்திரி வண்டிக்காக வினிஷா உமாசங்கர் பெற்றார்.

கூ.தக. : 16-வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டம் (Queen’s Baton Relay)  லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அக்டோபர் 7, 2021 அன்று தொடங்கி, 72 நாடுகள் மற்றும் காமன்வெல்த் பகுதிகளுக்கு 294 நாட்கள் பயணம் செய்த பின்னர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் 28 ஜூலை 2022 அன்று முடிவடையும். தொடர் ஓட்டத்தின் பாதையில் 27-வது நாடான இந்தியாவில் ஜனவரி 12 முதல் 15 வரை இது நடைபெறும்.#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top