நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆய்வு

 சென்னையிலுள்ள  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு  முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்  17-1-2022 அன்று  நேரடி ஆய்வை மேற்கொண்டார். இந்நிகழ்வில், செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச்சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி, ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு,Dravidian Comparative Grammar-II, A Historical Grammar of Tamil ஆகிய எட்டு புதிய நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட,  மாண்புமிகு  தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் பெற்றுக் கொண்டார். 

கூ.தக. :  தமிழ் மொழி 2004-ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.   2006-ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செம்மொழிக்கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!