Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

முக்கிய நியமனங்கள் - மே 2022

 👉   தில்லி அரசின் துணைநிலை ஆளுநராக வினய் குமார் சாக்சேனா (Vinai Kumar Saxena) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் ( Confederation of ndian Industry) தலைவராக சஞ்சீவ் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   மும்பை பங்கு சந்தையின் BSE (Bombay Stock Exchange)  தலைவராக சுபாஷ் செராட்டன் முந்திரா (Subhash Sheoratan Mundra) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ( (Central Board of Secondary Education (CBSE))  தலைவராக நிதி சிப்பர் (Nidhi Chibber) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   அமெரிக்காவின் ‘Federal Reserve Bank of New York’ வங்கியின்  இயக்குநர்களில் ஒருவராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஐ.பி.எம். (IBM (International Business Machines Corporation)) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் தலைவராக உள்ள அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   ஃபாங்க் ஆஃப் இங்கிலாந்து (Bank of England) வங்கியின்  நிதி கொள்கைக் குழுவின் உறுப்பினராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்வாதி திங்க்ரா (Swati Dhingra)   நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   இன்ஃபோஷிஸ் (Infosys ) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக சலில் பரேக் (Salil Parekh ) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   பே டி எம்” (Paytm ) நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக விஜய் சேகர் சர்மா  (Vijay Shekhar Sharma  ) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   இண்டிகோ’ (IndiGo )   தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பீட்டர் எல்பர்ஸ் (Pieter Elbers) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் (Bharti Airtel Limited ) மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக கோபால் விட்டல் (மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக ) நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   இந்தியாவின் லோக்பால்  (Lokpal )  அமைப்பின் முதலாவது  தலைவர்   பினாகி சந்திர கோஷ்  (Pinaki Chandra Ghose)   (2019 இல் நியமிக்கப்பட்டு தற்போது வரையில் பணிபுரிந்து வருகிறார். )

கூ.தக. :  லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்   (Lokpal and Lokayuktas Act) 2013 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.

👉   தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக திரு. கே.பி.ஆனந்த் பொறுப்பேற்றார்.

👉   இந்திய விமானப் படையின் முதல் பெண் போா் விமானியாக .ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளாா் .

👉   இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக  ராஜீவ் குமார்   பொறுப்பேற்றுக் கொண்டார்.ராஜீவ் குமார் பணிக் காலத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

👉   திரிபுரா முதல்வராக பாஜக மாநிலத் தலைவர் மாணிக் சஹா  பதவியேற்றுக் கொண்டார்.

👉   ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் விலசன் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கேம்ப்பெல் வில்சன் இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.

👉   அசோசெம் தமிழ்நாடு மாநில வளா்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

👉   குவாஹாட்டி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயா்த்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதையொட்டி,  சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.  இந்த இரு நீதிபதிகள் பதவியேற்பின் மூலம், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34-ஐ எட்டியுள்ளது.

👉   பிரதமர் மோடியின் ஆலோசகராக தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

👉   நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணா் சுமன் பெரி  பொறுப்பேற்றுக் கொண்டாா்.      

👉   தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தின் (National Commission for Scheduled Castes (NCSC) ) தலைவராக விஜய் சம்லா (Vijay Sampla)    நியமிக்கப்பட்டுள்ளார்.  

👉   தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் (National Commission for Minorities (NCM)) தலைவர் - இக்பால் சிங் லால்புரா (Iqbal Singh Lalpura)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot