பிரதமர் திரு.நரேந்திரமோடி, சென்னையில் ரூ.31,500கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
v மதுரை
- தேனி இடையே 75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தடத்தின் மூலம்
வசதியான பயணம் அமைவதுடன் அப்பகுதி சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும். ரூ.590 கோடி செலவில் தாம்பரம் –
செங்கல்பட்டு இடையே 30 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 3-வது
ரயில்வே பாதை மூலம் அதிக அளவிலான புறநகர ரயில்சேவையை அளிக்க முடியும். இது
பயணிகளுக்கு மேலும் வசதியை அளிக்கும். ரூ.850 கோடி
செலவில் எண்ணூர் – செங்கல்பட்டு இடையே 115 கிலோமீட்டர்
தொலைவிலும், ரூ.910 கோடி செலவில்
திருவள்ளூர் – பெங்களூரு இடையே 271 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எரிவாயு குழாய்
அமைக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு இயற்கை எரிவாயு வசதியை அளிப்பதுடன்
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேச
மாநிலங்களின் தொழிற்சாலைகளும் பயனடையும்.
v பிரதமரின்
நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குறைந்த
செலவில், நவீன வீடுகள் திட்டத்தின் மூலம் ரூ.116 கோடி மதிப்பில்
கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளும்
இந்நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
v ரூ.28,540 கோடி மதிப்பில் கட்டப்படும் 6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.14,870 கோடி
செலவில், 262
கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு – சென்னை விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது
கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு
ஆகிய மாநிலங்கள் வழியே செல்வதுடன் பெங்களூரு – சென்னை இடையேயான பயண நேரம் இரண்டு முதல் மூன்று மணி நேரம்
குறையும். சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலை இணைக்கும் வகையில், 21 கிலோமீட்டர் தொலைவிற்கு
நான்கு வழி இரண்டடுக்கு சாலை, ரூ.5,850 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது சரக்கு வாகனங்கள் சென்னை
துறைமுகத்தை எந்நேரமும் அடைய வாய்ப்பு ஏற்படும்.
v நெரலூரிலிருந்து
- தர்மபுரி வரை 94 கிலோமீட்டர் தொலைவிற்கு,
ரூ.3,870 கோடி செலவில் நான்கு
வழிப்பாதையும், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 31 கிலோமீட்டர்
தொலைவிற்கு ரூ.720 கோடி செலவில் இரண்டு வழிப்பாதையும்
அமைக்கப்பட உள்ளது. இது அப்பகுதியில் தடையில்லா போக்குவரத்துக்கு வழி வகுக்கும்.
v சென்னை
எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை,
காட்பாடி, கன்னியாகுமரி ரயில்
நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,800 கோடி மதிப்பில் நவீன அமைப்புகளுடன் பயணிகளின் வசதிகளுக்காக
இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
v சென்னையில், ரூ.1,430 கோடி மதிப்பில் பல்முனை நவீன சரக்கு
போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது தடையில்லா
சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் என்பதுடன் பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள
முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.