கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களின் மீது நடத்தப்பட்ட காலக் கணிப்புப் பரிசோதனைகளின்படி, தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.மனிதர்கள் இரும்பிற்கு முன்பாகவே தாமிரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இரும்பின் அளவுக்கு தாமிரம் உறுதியான உலோகம் இல்லை என்பதால், வனங்களை அழித்து விவசாய நிலமாக்குவதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தவிர, தாமிரத்தைவிட இரும்பின் உருகும் வெப்ப நிலை அதிகம். அதற்கேற்ற உலைகளும் தாமிர காலத்தில் கிடையாது. ஆகவே, ஒரு சமூகம் இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கியது என்றால், இரும்பை உருக்குவதற்கான தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு, நாகரிகத்தின் அடுத்த கட்டத்திற்கும் நகரத் துவங்கியது என்பதைக் குறிக்கிறது. இதற்குப் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி, உபரி உற்பத்தி, செல்வம், இனக் குழுக்களுக்குத் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கும்.
இந்தியாவில்
இரும்புக் காலம் பற்றி இதுவரையில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள்...
v 1979ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் உள்ள அஹார் என்ற இடத்தில் கிடைத்த மாதிரிகளின்
மூலம் இரும்புக் காலம் கி.மு. 1,300 என கண்டறியப்பட்டது.
கர்நாடக மாநிலம் புக்காசாகராவில் சேகரிக்கப்பட்ட நான்கு கரிமங்களை ஆய்வு செய்ததன்
மூலம் அங்கு இரும்பு உற்பத்திக் காலம் கி.மு. 1,530 என்று
நிறுவப்பட்டது.
v பின்னர், மத்திய கங்கைப் பள்ளத்தாக்கில் இரும்புத் தாது நிறைந்த ராய் பூரா என்ற இடத்தில்
நடத்தப்பட்ட அகழ்வாய்வில் அங்கு இரும்புக் காலம் கி.மு. 1700-1800 வாக்கில் இருந்திருக்கலாம் என உறுதிசெய்யப்பட்டது. உத்தரப்பிரதேச
மாநிலத்தில் உள்ள மல்ஹார் மற்றும் வடக்கு கர்நாடகாவில் உள்ள பிரம்மகிரி ஆகிய
இடங்களில் நடந்த ஆய்வுகளில் இரும்புக் காலம் கி.மு. 2,000
அளவுக்குப் பழமையானது எனத் தெரியவந்தது.
v கூ.தக. : ஏற்கனவே, கீழடிக்கு அருகேயுள்ள அகழாய்வுத் தளத்தில் சேகரிக்கப்பட்ட
மண்மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் அங்கே நெற்பயிா்கள் பயிரிடப்பட்டதற்கான
சான்றுகள் கிடைத்துள்ளன. சிவகளை வாழ்விடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை
ஆய்வு செய்ததில், அங்கே
நீா் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீா் சென்றுள்ளதும், தேக்கிவைக்கப்பட்ட நீா்நிலையிலிருந்து இந்த நீா் கொண்டு
வரப்பட்டதும் ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : www.bbc.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.