சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநிலத்தின் பொருளியியல் - புள்ளியியல் துறை மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழகத்தின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற்கொண்டன. மாநில அளவிலான இந்த கணக்கெடுப்பு கடந்த 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலானதாகும். இதன்படி, தமிழகத்தில் கல்வி கற்றோர் சதவீதம் கடந்த 2011-ல் 80.1 ஆகஇருந்த நிலையில் 2018-19-ல் 85.4சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு கிராமப்புறங்களில் 65.1-லிருந்து 73.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 82.3 -லிருந்து87.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கல்வி பெற்ற பெண்கள் சதவீதம் 73.4 சதவீதத்தில் இருந்து 80.2 சதவீதமாக 2011 மற்றும் 2018-19-க்கு இடைப்பட்ட காலத்தில் உயர்ந்துள்ளது.
இதர தகவல்கள் :
v தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் 19.4 சதவீதம் பேர் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். முன்னதாக 2015-16-ல் 18.6 சதவீதம்
வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 91 சதவீதம் பேர்ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுச்
சொத்துகளை வைத்துள்ளனர். 89 சதவீதம்
பேர் கைபேசிவைத்துள்ளனர். கிராமப்புறங் களில் உள்ள குடும்பங்களில் 31 சதவீதம் பேர் கைபேசிகள், இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர். 28 சதவீத நகர்ப்புற குடும்பங்கள் குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், கைபேசி ஆகிய மூன் றையும் வைத்துள்ளனர்.
v கிராமப்புறங்களில் 90.6 சதவீதம் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 57.8 சதவீதம் குடும்பங்களும் சொந்த வீடுகளில் வசிக்கின்றன.
வாடகை வீடுகள் நகர்ப்புறத்தில் 40.8
சதவீதம் உள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 61 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 86 சதவீதமும் வீடுகளுக்குள் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.
நன்றி
: இந்து தமிழ் திசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.