நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்கள் வாழவும் வேலை செய்யவும் முடியும்

 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்கள் வாழவும் வேலை செய்யவும் முடியும் என அமெரிக்க ஓரியன் சந்திர விண்கலத் திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ தெரிவித்துள்ளார். 


கூ.தக. : கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் அமஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார். 


வரும் 2024 ஆம் ஆண்டு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியான் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.  ஓரியான் விண்கலம் ஏற்கனவே பூமியிலிருந்து 232,683 மைல்கள் பயணித்துள்ளது.


நன்றி : தினமணி

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!