நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றறிதலை மேம்படுத்த புதிய திட்டம்

 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றறிதலை மேம்படுத்த புதிய திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி., பள்ளி கல்வித்துறை இணைந்து தயாரிக்கிறது.  அதன்படி, சென்னை ஐ.ஐ.டி.ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கும் கற்றறிதல் மேலாண்மை முறை, சமீபத் தில் அரசு பள்ளிகளில் உருவாக்கப்பட்ட 6 ஆயிரம் அதிநவீன ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும். இதன்மூலம் 90 லட்சம் மாணவர்களின் கற்றறிதல் திறன் மேம்படும். கல்வி தமிழக பள்ளி மாணவர்களுக்கு,  மேலாண்மை தகவலியல் முறையின்படி தற்போது வகுப்பறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், மதிப்பீடுகளை மேம்ப டுத்தி கல்வி உபகரணங்களை பரப்புதலுக்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்குவார்கள். சென்னை ஐ.ஐ.டி. மற்றும் தமிழக பள்ளி கல்வித் துறை இணைந்து பணியாற்றும் இந்த திட்டத்துக்கு, முதன்மை புலனாய்வாளராக சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மை படிப்புகள் துறையின் இணை பேரா சிரியர் நந்தன் சுதர்சனம் செயல்படுவார். 

நன்றி : தினத்தந்தி

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!