முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் அரசியலமைப்பின் 142ஆவது பிரிவு வழங்கியுள்ள தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து, நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் இவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி, அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.
142 வது பிரிவு பற்றி ...
“உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள விஷயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றம் மூலம் அல்லது எந்த சட்டத்தின் கீழும் பரிந்துரைக்கப்படக்கூடிய வகையில், அதற்கான ஏற்பாடு செய்யப்படும் வரையோ அல்லது குடியரசுத் தலைவர் உத்தரவின்படி பரிந்துரைக்கும் வகையிலோ இந்தியப் பகுதி முழுவதும் அமல்படுத்தப்படலாம்.” என்று சட்டப்பிரிவு 142(1) கூறுகிறது.
எப்போதாவது, உச்ச நீதிமன்றம் இந்த அரசியலமைப்பு விதியை செயல்படுத்துகிறது,
போபால் விஷவாயு துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 470 மில்லியன் டாலர்களை நிவாரணம் பெற்றுத் தந்த, 1989 ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் வழக்கு (போபால் வாயு கசிவு) மற்றும் 2019 அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய வழக்குகளில் 142ஆவது பிரிவை கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் செயல்படுத்தியுள்ளது. தற்போது பேரறிவாளன் வழக்கில் இதே பிரிவை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.