Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மைசூரு - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Mysuru - Chennai Vande Bharat Express) - 10 முக்கிய தகவல்கள்

 1. மைசூரு மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் 11.11.2022 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 


2. இது நாட்டில் தொடங்கப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பதுடன் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும்.  


3. 'மேக் இன் இந்தியா' வெற்றிக்கு  ஒரு சிறந்த உதாரணமாக, இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் உள்நாட்டு அதிவேக ரயில்- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  கான்பூர்- அலகாபாத்-வாரணாசி வழித்தடத்தில் பிரதமரால் பிப்ரவரி 15, 2019 அன்று புது தில்லியில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி- மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் - அகமதாபாத் - மும்பை சென்ட்ரல், மற்றும் ஆம்ப் ஆண்டௌரா - புது தில்லி வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.


4. இந்த புதிய ரயில், தொழில்துறை மையமான சென்னைக்கும், தொழில்நுட்ப-மென்பொருள்-தொடக்க மையமான பெங்களூரு மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மைசூருவுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். 


5. மைசூரு - பெங்களூரு - சென்னையில் பயணம் செய்யும் வழக்கமான பயணிகள் தவிர, மென்பொருள் மற்றும் வணிக வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். இது விமான சேவை போன்ற வசதியை வழங்குவதுடன் ரயிலில் புதுமையான பயண அனுபவத்தை வழங்கும்.


6. மைசூரு- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேரம்


சென்னையிலிருந்து காலை 5.50-க்கு புறப்படும் ரயில், காட்பாடி ரயில் நிலையத்தை காலை 7.21-க்கு சென்றடையும். அங்கிருந்து 7.25-க்கு புறப்பட்டு, பெங்களூரு நகரத்தை காலை 10.20 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10.25க்கு புறப்பட்டு, மைசூருவை மதியம் 12.20 மணிக்கு அடையும்.


மறுமார்க்கத்தில், மைசூருவிலிருந்து பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, சென்னையை இரவு 7.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பெங்களூருவை 2.55 க்கும், காட்பாடியை மாலை 5.36க்கும் வந்தடையும். இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களும், காட்பாடி நிலையத்தில் 4 நிமிடங்களும் நிற்கும்.


7.  மைசூரு- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  டிக்கெட் கட்டணம்

 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து மைசூருக்கான இருக்கை ரூ.1200. உயர்வகுப்பு கட்டணம் ரூ.2295. மைசூருவில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு சாதாரண கட்டணம் ரூ. 1365 .உயர் வகுப்பு கட்டணம் ரூ. 2485.


8..  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சலுகை கட்டணங்களோ, குழந்தை கட்டணமோ  அனுமதிக்கப்படாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். முன்பதிவு செய்தல், ரத்து செய்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சதாப்தி ரயில்களின்படி இருக்கும்.


9.  வந்தே பாரத்  இரயில்கள்  சென்னை பெரம்பூரிலுள்ள ஒருங்கிணைந்த இரயில்பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory) தயாரிக்கப்பட்டது. 


10.  வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் சிறப்பம்சங்கள்:


 மேம்பட்ட பாதுகாப்பிற்காக கவாச் (ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு) பொருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு அவசரகால ஜன்னல்களுடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு பெட்டிக்கு வெளியே பின்புறக் காட்சி கேமராக்கள் உட்பட நான்கு பிளாட்ஃபார்ம் பக்க கேமராக்கள் உள்ளன.

அனைத்து மின்சார அறைகள் மற்றும் கழிப்பறைகளில் ஏரோசல் அடிப்படையிலான தீ கண்டறிதல் மற்றும்  அணைக்கும் அமைப்புடன் சிறந்த தீயணைப்பு வசதி. 

இந்த ரயிலில் மின்சாரம் பழுதானால் ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு அவசர விளக்குகள் பொருத்தப்படும்.

இந்த  ரயிலில் 32 இன்ச் எல்சிடி டிவிகள் மற்றும் பயணிகள் தகவல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்பினருக்கும் பக்கவாட்டில் சாய்வு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 

எக்ஸிகியூட்டிவ் கோச்சுகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பயோ வெற்றிட கழிப்பறைகள்.

நுண்ணிய வெப்ப காற்றோட்டம் மற்றும் அதிக திறன் கொண்ட கம்ப்ரசர் மூலம் ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடு.

கிருமிகள் இல்லாத காற்றை வழங்குவதற்காக அல்ட்ரா வயலட் (UV) விளக்கு.


செய்தி ஆதாரம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1875184

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot