'சீ விஜில்' (‘Sea Vigil-22’) ஒத்திகை என்ற பெயரில் நாடு தழுவிய கடலோர பாதுகாப்பு ஒத்திகை 15,16 நவம்பர் 22 தினங்களில் இந்திய கடற்படையால் கடலோர காவல்படை மற்றும் கடல்சார் நடவடிக்கைகளின் பணியை மேற்கொள்ளும் பிற அமைச்சகங்களுடன் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைப் போன்ற தாக்குதல்களிலிருந்து கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2018 இல் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட
'சீ விஜில்' ஒத்திகை இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பு அமைப்பை சுய மதிப்பீடு நோக்கமாகக் கொண்டது.
கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல்களைத் தடுப்பது, சமூக விரோதச் செயல்களைத் தடுப்பது மற்றும் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒத்திகையே இந்த 'சீ விஜில்' ஆபரேஷன் ஆகும்.
இப்பயிற்சியில் அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மற்ற கடல்சார் பங்குதாரர்கள், மீன்பிடி மற்றும் கடலோர சமூகங்கள் உட்பட பல அமைப்புகள் பங்கு பெறுகின்றன.
தமிழகக் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பாக 'சீ விஜில்' என்ற ஆபரேஷன் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கடலோரம் உள்ள எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த 'சீ விஜில்' ஆபரேஷன் தொடங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.