நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

”ஸ்வாமிதா” (SVAMITVA) திட்டம் - வல்லுநர் குழுவின் அறிக்கை தாக்கல்

”ஸ்வாமிதா” / கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் உருவாக்குதல்  திட்டம் (SVAMITVA (Survey of villages and mapping with improvised technology in village areas) scheme) குறித்து  பிப்ரவரி 2022 -இல்   B. K. அகர்வால் - இன்  தலைமையில்    அமைக்கப்பட்ட  வல்லுநர் குழுவின் அறிக்கை  9.11.2022 அன்று மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. 

கூ.தக. :  2020-2021 நிதி ஆண்டில் அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின்   SVAMITVA   திட்டமான மக்கள் வசிக்கும் பகுதிகளில், சட்டப்பூர்வ உரிமையுடன் (சொத்து அட்டைகள்/தலைப்புப் பத்திரங்கள்) வீடுகளை வைத்திருக்கும் கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு 'உரிமைகள் பதிவேடு' வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் உள்ள கிராமப்புற மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நிலங்கள் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணக்கெடுக்கப்படுகின்றன. 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை நாட்டில் உள்ள 6.62 லட்சம் கிராமங்களை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் உள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், இந்திய சர்வே  , மாநில வருவாய்த் துறை, மாநில பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுடன் இது செயல்படுத்தப்படுகிறது.  


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!