இந்திய அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்

TNPSCPortal.In
இந்திய அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கைகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், ஒரு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. 

தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் கொரோனா காலத்தில் மருத்துவ படுக்கைகளின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் படுக்கைகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டன. இதன் விளைவாக, தற்போது அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கைகள் உள்ளன. இதன் மூலமாக இந்திய அளவில் அதிக மருத்துவ படுக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top