விண்கலம் ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக லூனா-25 விண்கலத்தை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் கடந்த 10.8.2023-ஆம் தேதி விண்ணில் ஏவியது. விண்கலத்தை ஆகஸ்ட் 21-ஆம் தேதி நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்த நிலையில் நிலவில் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு இந்த தகவலை நாசா வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.