மாநிலங்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா :
- மாநிலங்களவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் 21.9.2023 அன்று தாக்கல் செய்தார்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா :
- மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் 20.9.2023 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதாவுக்கு (The Constitution (One Hundred and Twenty-Eighth Amendment) Bill, 2023) மத்திய அமைச்சரவை 18.9.2023 அன்று ஒப்புதல் அளித்த நிலையில், மக்களவையில் 19.9.2023 அன்று தாக்கல் செய்தார்.
- புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 19.9.2023 அன்று தொடங்கிய மக்களவைக் கூட்டத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமைந்தது.
- இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி மகளிர் இடஒதுக்கீடுக்கு எதிராக வாக்களித்தார். முஸ்லீம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதனை நிராகரித்ததால், அவர் இம்மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்.அவரைத் தொடர்ந்து பிரேம்சந்திரன் என்பவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அதனைத் திரும்பப் பெற்றார். இதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரான வாக்கு ஒன்றாக குறைந்தது.
- மகளிருக்கான இடஒதுக்கீட்டில் 3-ல் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., தொகுதி ஒதுக்கீடு மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்த பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல், மொத்தமுள்ள சட்டப்பேரவைகளில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் சட்டப்பேரவைகள் ஒப்புதல் அளித்த பிறகே மசோதா அமலுக்கு வரும்.
- பெண்கள் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகி 15 ஆண்டுகளுக்கு (மக்களவையின் 3 பதவிக்காலங்கள்) அமலில் இருக்கும், ஆனால் அதன் காலம் நீட்டிக்கப்படலாம்.
- முக்கியமாக, ஒவ்வொரு முறை தொகுதி வரையறை செய்யப்பட்ட பிறகும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது நாடாளுமன்றத்தில் 14 சதவிகித பெண்கள் மட்டுமே உள்ளனர். மக்கள்தொகையை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி : தினமணி
கூ.தக.:
- 1996 ஆம் ஆண்டு தேவ கௌடா அரசு முதல்முதலில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது. அதன்பின்னர் அரசுகள் பலமுறை முயன்று 2010ல் மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் மட்டும் மசோதாவை நிறைவேற்றியது.
- இதன்பின்னர் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி(பாஜக) அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மசோதா நிறைவேற்றப்பட மூன்றில் இரண்டு பங்கு அவை உறுப்பினர்கள் இதற்கு வாக்களிக்க வேண்டும், மேலும் 50% சட்டப்பேரவைகளில் ஒப்புதல் அளிக்க வேண்டும
1952 முதல் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு : (நன்றி : தினமணி
- 1952 ஆம் ஆண்டு முதல் மக்களவையில் 5% பெண் எம்.பி.க்கள் இருந்தனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சதவீதம் ஒற்றை இலக்கத்திலேயே இருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டுதான் இரட்டை இலக்கமாக (11%) மாறியுள்ளது.
- 2019 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 15% பெண்கள் மக்களவையில் இருந்துள்ளனர்.
- அதுபோல 2014 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் 12.7% பெண் எம்.பி.க்கள்தான் அதிகபட்சம்.
- நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெண்களின் சதவிகிதம் இதுவரை 15 சதவிகிதத்திற்குள்ளாகவே இருக்கிறது.
- தற்போதைய 17 ஆவது மக்களவையில் 14.94% பெண்கள். திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் அதிக பெண் எம்.பி.க்களைக் கொண்டுள்ளது. மாநிலங்களவையில் 14.09% எம்.பி.க்கள் பெண்கள்.
- எண்ணிக்கையில் மக்களவையில் 78, மாநிலங்களவையில் 24 என மொத்தம் 102 எம்.பி.க்கள் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
- மாநில சட்டப்பேரவைகளில் சராசரியாக 10% மற்றும் அதற்குக் குறைவாகவே பெண்கள் உள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 5.13% பெண்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.