- யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்ற 45-ஆவது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.
- கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
- மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்திநிகேதன், கவிஞர் மற்றும் தத்துவயியலாளரான ரவீந்திரநாத் தாகூரால், கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- ஜாதி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் களைந்து தியானம் செய்வதற்கான ஆசிரமம், கவிஞா் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரால் இங்கு நிறுவப்பட்டது.
- இது சுதந்திரத்துக்கு முன் கல்லூரியாகச் செயல்பட்ட நிலையில், 1951-ஆம் ஆண்டுமுதல் மத்திய பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நன்றி : தினமணி
யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரிய சின்னங்கள்’ பட்டியலில் “ஒய்சாலா கோவில்கள்” மற்றும் ”சாந்திநிகேதன்”
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.