நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் - அரசாணை வெளியீடு.

பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டம் நீலப்புரட்சி திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 18.08.2023 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் 1,000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டதை நிறைவேற்றும் வகையில்,   பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவிடும் பொருட்டு 2023-24-ஆம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 1,000 எண்ணிக்கையிலான 28 குதிரைத்திறனுக்கு குறைவான இயந்திர சக்தியுடைய வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்களை, இயந்திரம் ஒன்றின் விலை ரூ.1.20 இலட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானியத்தில் வழங்கிட   மானியத் தொகையாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது.  


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!