நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த   எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  இதற்காக தொடர்ச்சியாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதுவரையில் 4,500-க்கும் அதிகமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 24.9.2023 அன்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. அவை புவி வட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!