நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் இலக்கிய விருது

 ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் இலக்கிய விருதினை முதன்முதலாகப் பெற்றிருக்கிறார் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்த விருது தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்புக்காக எழுத்தாளர்  பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் சிறந்த அபுனைவுக்காக எழுத்தாளர் அனிருத் கனிஷெட்டிக்கும் புனைவுக்காக தேவிகா ரெகேவுக்கும் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

கூ.தக. : 2014ல் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல் வெளியாகி அதன் கதை உலகத்தையே தகிக்க வைத்தது. சர்வதேச புக்கர் பரிசுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல் என்ற சாதனையை இந்த நாவல் பெற்றது. 2015 ஆம் ஆண்டில்,  'மாதொருபாகன்'  வெளியானது.  மேலும் அர்த்தநாரி, ஆலவாயன், பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, 'கூளமாதாரி' உள்ளிட்ட அவரது பல நாவல்களும் பல சிறுகதைத் தொகுப்புகளும் கவிதைத் தொகுப்புகளும் புகழ்பெற்றவை. 

அனிருத் கனிசெட்டி ஒடிஸி மொழியில் எழுதிய 'லார்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை' (Lords of the Deccan: Southern India from Chalukyas to Cholas)  புத்தகம் வாசகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இவரது இந்த புத்தகம் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸாகவும் வெளியாகவுள்ளது.

'குவாட்டர்லைஃப்' (Quarterlife) என்ற தனது முதல் நாவல் மூலமாக 2023 ஆம் ஆண்டின் இலக்கிய நட்சத்திரமாகியுள்ளார் தேவிகா ரெகே. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!