நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

கீழடி 9-ம் கட்ட அகழாய்வில் கார்னிலியன் கல் வகையை சார்ந்த உயர்வகை சிவப்பு கல்மணிகள் கண்டெடுப்பு

 கீழடியில் நடைபெறும், ஒன்பதாம் கட்ட அக ழாய்வில், முதன்முறையாக வேலைபாடுடன் கூடிய கார்னிலியன் கல் வகையை  சார்ந்த  சூதுபவளங்கள் எனப்படும் உயர்வகை சிவப்பு கல்மணிகள்  கண்டெடுக்கப்பட்டன. 

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், ஒன்பதாம் கட்ட அகழாய்வு, கீழடி, கொந்தகை ஆகிய இரு - தளங்களில் நடந்து வருகிறது. கொந்தகை தளத்தில் கண்டறியப்பட்ட  முதுமக்கள் தாழியில்,  ஆய்வு செய்த போது, 1.4 செ.மீ., நீளம், 2 செ.மீ., விட்டம் கொண்ட இரண்டு சூது பவளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

கீழடியில் ஏற்கனவே வராஹி உருவம் பதித்த சூதுபவளம் கண்டறியப்பட்டது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டின் அகழாய்வில், 80வது முதுமக் கள் தாழியினுள்,  சூதுபவளங்கள் கண்டறி யப்பட்டன. இவை எல்லாம் ஒரே மாதிரியா னவை என அறியப்பட்ட நிலையில், தற்போது கிடைத்த இரண்டு சூதுபவளங்களில் ஒன்றில் மேலும், கீழும் தலா இரண்டு கோடுகளும், நடு வில் அலைகள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. 

குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிகமாக சூதுபவளங்கள் காணப்படும். கீழடி அகழாய்விலும் இது கிடைத்திருப்பது வணிக தொடர்புக்கான அடையாளமாக காணப்படுகிறது. 2,500 ஆண்டுகள் பழமையானது வழக்கமாக அகழாய்வில் கண்டெடுக்கப்படும் கண் ணாடி மணிகள், பாசி மணி கள், கல் மணிகள் வரிசையில் சூதுபவள மணிகளும் கிடைத்து வருகின்றன. ஏற்க னவே கொந்தகையில் 3-ம் கட்ட அகழாய்வில் அகழ்ந் தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் இதேபோல் 74 சூது பவளம் மணிகள் கண்டெடுக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சங்க காலத்தில் சூதுபவளம் மணிகள் அழகு பொருட் கள் மற்றும் அணிகலன்களில் அதிக அளவில் பயன்படுத் தப்பட்டதாகவும், குறிப்பாக பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள்தான் இதை பெரும்பாலும் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  தற்போது கண்டெடுக்கப் பட்ட சூதுபவளம் மணிகள் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!