தமிழ்நாட்டில் 6,200 மெகா வாட் திறனில் சூரியசக்தி; 10,170 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. சூரியசக்தி மின்சாரம் பகலிலும்; காற்றாலை மின்சாரம் மே முதல் செப்., வரையும் அதிகம் கிடைக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத இரு வகை பசுமை மின்சார மும் உற்பத்தியான உடனே பயன்படுத் தப்படுகிறது. அந்த மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் இல்லை. அதேசமயம் வெளி நாடுகளில், 'கண்டெய்னர்' போன்ற வடிவம் உடைய பேட்டரியில் பசுமை மின் சாரம் சேமிக்கப்பட்டு,தேவைக்கு ஏற்ப பயன் படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு,தமிழக தொழில் முதலீடுகளை ஈர்க்க, 2024 ஜனவரி யில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத் துகிறது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களுடன், அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் ராஜா அவர்கள், இந்தியாவில் தமிழ கத்தில் தான் காற்றாலை, சூரியசக்தி மின்சார உற்பத்தி, 50 சதவீதம் மேல் உள்ளது. தமிழகத்தில், காற் றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்தை சேமிக் கும், 'கிரீன் எனர்ஜி. ஸ்டோரேஜ்' படும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்து வதில், அரசு கவனம் செலுத்த உள்ளது எனக் கூறியுள்ளார்.
கருத்துரையிடுக
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.