-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

இந்தியாவில் சொத்து வாரிசுரிமை வரி (inheritance tax)

 

மக்களிடையே செல்வத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும், வருவாய் பகிா்வில் சமநிலையை உருவாக்கவும்,  வருமான இடைவெளியைக் குறைக்கவும் வாரிசு சொத்துரிமை வரி (inheritance tax)  1953-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5% முதல் அதிகபட்சம் 85% வரை வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாரிசுகளுக்கு மாறினால் இந்த வரியை செலுத்தியாக வேண்டிய சூழல் இருந்தது. ரூ.20 லட்சத்துக்கு மேலான சொத்துகளுக்கு 85% வரை வரி விதிக்கப்பட்டது. பின்னா் இந்த வரிவிதிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டு, 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அரசால் இந்த வரி ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் செல்வம் தொடர்பான பிற வரிகள் இருந்தன. இவற்றில் செல்வ வரி (wealth tax) மற்றும் பரிசு வரி (gift tax) ஆகியவை அடங்கும். செல்வ வரி (wealth tax) 2015 இல் ரத்து செய்யப்பட்டது, மற்றும் பரிசு வரி 1998 இல் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான யோசனை 2019மக்களவைத் தேர்தலின் போதும், ஜூலை பட்ஜெட் தயாரிப்புகளின் போதும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.   


இந்தியாவில் வரிகள்

வாரிசுரிமை வரியாக இருந்த செலவ வரி ஆரம்பத்தில் ரூ. 1 லட்சமாக இருந்தது. மேலும் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள  சொத்துகளுக்கு 5% முதல் 40% வரை வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. 1953 இன் எஸ்டேட்  வரி  சட்டம் (Estate Duty Act, 1953) 1958 இல் மாற்றப்பட்டது, அதன்படி, பொறுப்புள்ள நபரின் (accountable person) வரையறை மாற்றப்பட்டது, பொருந்தக்கூடிய வரம்பு குறைக்கப்பட்டது மற்றும் அடுக்குகள் மறுவரையறை (redefine slabs) செய்யப்பட்டன.


உலகளவில் வாரிசுரிமை வரியின் நிலவரம் 

மார்ச் 2024 இல் சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) ஒரு குறிப்பு, சமீபத்திய பத்தாண்டுகளில் செல்வ                                                                                                                                                                                                 வரி விகிதங்கள் பொதுவாக உலகளவில் குறைந்துள்ளன என்று குறிப்பிட்டது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வருமான நிலைகளில் சராசரி பெருநிறுவன வருமான வரி விகிதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இதில் அடங்கும்.

1990 ஆம் ஆண்டில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (Organisation of Economic Co-operation and Development (OECD)) உள்ள 12 நாடுகளில் செல்வ வரிகள் இருந்ததாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இப்போது, ​​சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே பரந்த அடிப்படையிலான செல்வ வரியை (wealth tax) தொடர்ந்து விதிக்கின்றன.

வளா்ந்த நாடுகளுக்கு உகந்த வரியாகவே வாரிசுரிமை வரி கருதப்படுகிறது. வளரும் நாடுகள், நடுத்தர வருவாய் பிரிவினா் அதிகமுள்ள நாடுகளில் இந்த வரி அமலில் இல்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இத்தாலி, ஜப்பான் என 26 நாடுகளில் மட்டுமே இந்த வரி அமலில் உள்ளது. 1% 55% வரை வாரிசுரிமை வரி விகிதம் உள்ளது.தென்கொரியாவில் அதிகபட்சமாக 50%, ஜப்பானில் 55% வரி விதிக்கப்படுகிறது. அமெரிக்காவிலும் கூட 6 மாகாணங்களில் மட்டுமே இந்த வரி உள்ளது. தேசிய அளவில் அனைத்து மாகாணங்களிலும் இந்த வரி அமலில் இல்லை.


 இந்தியாவில் சொத்து வாரிசுரிமை வரியின் தற்போதைய நிலைமை 

இந்தியாவில் இப்போது தனிநபா் வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவா்களுக்கு வருமான வரியுடன் 10% கூடுதல் வரி (சா்சாா்ஜ்) விதிக்கப்படுகிறது. புதிய வரிமுறையைப் பின்பற்றுவோருக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் இந்த கூடுதல் வரி 25% வரை உள்ளது. இதுவே வருவாய் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான ஒரு வ(ரி)ழிமுறையாகவே கருதப்படுப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்புகூட இந்த சொத்து வாரிசுரிமை வரி தொடா்பான ஆலோசனை நடத்தப்பட்டு, இறுதியில் கைவிடப்பட்டது.

இந்தியாவின் 44வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் சொத்து உரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கியது. தற்போது, ​​இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சமூக வளங்கள் மற்றும் சொத்துரிமைகளைக் குறிக்கும் பிரிவு 39(பி)ஐ மதிப்பாய்வு செய்து வருகிறது. மாநிலக் கொள்கையின் இந்த வழிகாட்டுதல் கோட்பாட்டில் உள்ள "சமூகத்தின் பொருள் வளங்கள்" என்ற சொற்றொடர் தனியாருக்கு சொந்தமான வளங்களை உள்ளடக்கியதா மற்றும் பொது நலனுக்காக அத்தகைய வளங்களை மறுபகிர்வு செய்ய அரசாங்கத்தை அனுமதிக்கிறதா என்பதைப் பற்றி இந்தக் குழு ஆராய்கிறது.

கூ.தக. : 1956ல் இந்து வாரிசுச் சட்டம் (Hindu Succession Act of 1956) மூத்த மகனுக்கு மட்டுமின்றி அனைத்து வாரிசுகளுக்கும் சொத்து சமமாகப் பங்கிடப்படுவதை உறுதி செய்தது. 



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.