-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 3 May 2024

  இந்தியா

உச்சநீதிமன்ற வழக்கறிஞா் சங்க நிர்வாகிகள் குழுவில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் 2.5.2024 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நிா்வாகிகள் குழுவில் இடம்பெற்றுள்ள 9 இடங்களில் மூன்று இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும். மேலும், 6 முதுநிலை நிா்வாக உறுப்பினா் பதவியில் 2 இடங்களும், அலுவலா் பொறுப்பில் குறைந்தது ஓரிடமும் மகளிருக்கு சுழற்சி முறையில் ஒதுக்கப்பட வேண்டும்.


இந்தியாவின் முதலாவது டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகமாக (transshipment port) கேரளாவில் உள்ள அதானியின் விழிஞ்சம் துறைமுகம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

கூ.தக.  ஒரு டிரான்ஸ்ஷிப்மென்ட் துறைமுகம் என்பது,  இறுதி இடங்களை அடைவதற்கு முன் பெரிய கப்பல்களில் இருந்து சிறிய கப்பல்களுக்கு  சரக்குகளை மாற்றுவதற்கு உதவும் ஒரு முக்கியமான மையமாகும். இந்தியாவின் டிரான்ஸ்ஷிப்மென்ட் சரக்குகளில் சுமார் 75% இந்தியாவிற்கு வெளியே உள்ள துறைமுகங்களில் கையாளப்படுகிறது. கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் துறைமுகங்கள் 85% க்கும் அதிகமான சரக்குகளைக் கையாளுகின்றன.


உலகம்

விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக புதிய வரைவுத் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா தாக்குதல் செய்துள்ளது.முன்னதாக, இதே விவகாரத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீா்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷியா ரத்து செய்த நிலையில், கூடுதல் அம்சங்களை உள்ளடக்கிய தனது வரைவுத் தீா்மானத்தை ரஷியா முன்வைத்துள்ளது.அந்த வரைவுத் தீா்மானத்தில், அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த வாரம் கூட்டாகக் கொண்டுவந்த அந்தத் தீா்மான அம்சங்களுடன், ‘விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுவுவதைத் தடுப்பது மட்டுமின்றி, எந்தவகை ஆயுதங்களையும் ஏவுவதற்கு விண்வெளி எப்போதுமே பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யவேண்டும்’ எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூ.தக. :  ‘விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம்’ கடந்த 1967-ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வெளிநாட்டு உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் முதல் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure) மாநாடு, 'குடிமக்கள் ஸ்டாக்: டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, குடிமக்களுக்கான உருமாறும் தொழில்நுட்பம்'  (Citizen Stack: Digital Public Infrastructure, Transformative Technology for Citizens) என்ற தலைப்பில்  அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில்  இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது.  இந்த மாநாடு இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) கட்டமைப்பை உலகளாவிய தரநிலையாக அறிமுகப்படுத்தியது.

இந்த மாநாடு, இந்தியாவின் நிரந்தர மிஷன் (Permanent Mission of India) மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), iSPIRT அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.

இந்தக் கூடுகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ், G20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் காணொளி மூலமாகக் கலந்துகொண்டனர். 


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை (Kankesanthurai Port ( KKS Port)) இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக,  இந்தியா 61.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டின் மொத்த மதிப்பீட்டை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.  

KKS துறைமுகத்தின் இராஜதந்திர முக்கியத்துவம் :  

காங்கேசன்துறை  துறைமுகம், ஏறத்தாழ 16 ஏக்கர் பரப்பளவில், இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து 104 கிமீ (56 கடல் மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

நேரடி பயணிகள் கப்பல் சேவையானது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தை KKS துறைமுகத்துடன் இணைக்கிறது, சுமார் 3.5 மணி நேரத்தில் 111 கிமீ (60 கடல் மைல்) தூரத்தை கடக்கிறது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் ஆற்றலை துறைமுகம் கொண்டுள்ளது.

 

பொருளாதாரம்

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னா் முதன் முறையாக கடந்த ஏப்ரல் 2024 மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும் இது கடந்தாண்டு இதே ஏப்ரல் மாதத்தை விட 12.4 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு பரிவா்த்தனையின் அதிகரிப்பு காரணமாக, இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட அதிகரித்துள்ளது.

கூ.தக. : மாநில ஜிஎஸ்டி வசூலில் தமிழ்நாடு ரூ. 6,660 கோடியை பெற்றுள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரலை விட (13 சதவீதம்) கணிசமாக வளா்ச்சியைக் கண்டுள்ளது.


ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பான புதிய அந்நியச் செலாவணி மாற்று விகிதம் 03.05.2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. சுங்கச் சட்டம், 1962 பிரிவு 14-இல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தீா்மானித்துள்ளது.  இதில், அமெரிக்க டாலா் இந்திய ரூபாயின் மதிப்புக்கு இறக்குமதிக்கு ரூ.84.35, ஏற்றுமதிக்கு ரூ.82.90 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதாக ரிசா்வ் வங்கி 2.5.2024 அன்று தெரிவித்தது. பொதுமக்களிடம் தற்போது ரூ. 7,961 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது அந்த நோட்டுகளைக் கொடுத்து ரூ.100, ரூ.500 போன்ற நோட்டுகளாக மாற்றி பெற்றுக் கொள்ளவும் கடந்த ஆண்டு அக்டோபா் 7 வரை ரிசா்வ் வங்கி அவகாசம் அளித்தது.

அதன் பின்னா், கடந்த ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் ரூ.2,000 நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ள ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. நேரில் செல்ல முடியாதவா்கள் தபால் மூலம் 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பப்படும் நோட்டுகளுக்கு ஈடான பணம், அவற்றை அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


முக்கிய தினங்கள்

ஆயுஷ்மான் பாரத் தினம்  (Ayushman Bharat Diwas) - ஏப்ரல் 30 

கூ.தக. :  ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி .  . .   

அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கினை அடையும் நோக்கோடு, 

 தேசிய சுகாதாரக் கொள்கை 2017 இன் பரிந்துரையின்படி ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. .பிரதமர்  நரேந்திர மோடி 2018 செப்டம்பர் 23 அன்று ஜார்கண்டின் ராஞ்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இத்திட்டம், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres (HWCs)); மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)) ஆகிய  ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது:


சர்வதேச தொழிலாளர் தினம் - மே

கூ,தக. : எட்டு மணி நேர வேலை நாள் கோரி 1886 சிகாகோ தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் இருந்து தொழிலாளர் தினம் உருவானது, ஹேமார்க்கெட் சம்பவத்திற்குப் பிறகு இது முக்கியத்துவம் பெற்றது. 1889 இல், இருபது நாடுகளின் தலைவர்கள் அதை சர்வதேச தொழிலாளர் தினமாக நிறுவினர். 

2024  ஆண்டிற்கான தொழிலாளர் தினத்தின் மையக்கருத்து “காலநிலை மாற்றத்தின் மத்தியில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல்”  (workplace safety and health amidst climate change) என்பதாகும். 

 

நியமனங்கள் 

கடற்படை துணைத் தளபதியாக சுவாமிநாதன் நியமனம் : அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 30.04.2024 அன்று இந்திய கடற்படை தளபதியாக பொறுப்பேற்றதையடுத்து, அவர் வகித்த துணை தளபதி பொறுப்புக்கு வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 


தேசிய சூரிய ஆற்றல் நிறுவனத்தில் (National Institute of Solar Energy (NISE)) இயக்குநர் ஜெனரலாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில்  மின் பொறியியல் துறையின் பேராசிரியரான டாக்டர் முகமது ரிஹான் நியமிக்கப்பட்டுள்ளார். 

கூ.தக. :  2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சூரிய ஆற்றல் நிறுவனத்தின் தலைமையிடம் குருகிராமில் (ஹரியானா) அமைந்துள்ளது. 


அறிவியல் தொழில்நுட்பம் 

நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் சந்திரயான்-3 ஆய்வில் கண்டுபிடிப்பு : 

இந்தியாவினால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத் திட்டத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களை இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மற்றும் ஐஐடி (ஐஎஸ்எம்) தன்பாத் ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வு செய்ததில் நிலவின்துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேலும், வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு, தென் துருவப் பகுதியை விட 2 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவருகிறது.  

நிலவின் தென் துருவப் பகுதிகளில் சுமார் 38,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட வாயுக்கள் வெளியேற்றம், இந்த பனிக்கட்டிகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையே இஸ்ரோவின் தற்போதைய ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

சந்திரயான்-3 (Chandrayaan-3)  திட்டம் பற்றி . . . 

சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூன்றாவது சந்திரனை ஆய்வு செய்வதற்கான திட்டமாகும். 

இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி LVM3-M4 (formerly known as GSLV Mk III) மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ்தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

தொடர்ந்து பல்வேறுகட்ட பயணங்களுக்கு பின்னர் விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் ஆகஸ்ட் 23-ம்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து ரோவர் வாகனமும் பத்திரமாக நிலவின் தரைப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றது. 

அதன்பின் லேண்டர் தரை இறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் அனுப்பியது.

 சந்திராயன் -3 திட்டத்தின் முக்கிய பகுதிகள் :  

லேண்டர் (விக்ரம்) (Lander (Vikram)): சந்திரனில்  பாதுகாப்பாக தரை இறங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

ரோவர் (ப்ரக்யான்) (Rover (Pragyan)) : : லேண்டரிலிருந்து புறப்படும் சிறிய வாகனம், ஆராய்வு மற்றும் பரிசோதனைகளுக்கான விஞ்ஞான கருவிகளுடன்.

ப்ரொப்பல்ஷன் அமைப்பு (Propulsion Module): லேண்டர்  தரையிறங்கும் போது அதன் நிலைத்தன்மையை உறுதி செய்யும் அமைப்பு.  


சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி : 

 மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) உருவாக்கிய  அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான நீர்மூழ்கி வெடிகுண்டான  சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை ஒடிசா மாநில கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து 1.5.2024 அன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

சூப்பர்சானிக்-டார்ப்பிடோ-ஏவுகணை (Supersonic-torpedo-missile) பற்றி : 

சூப்பர்சானிக்-டார்ப்பிடோ-ஏவுகணை என்பது உண்மையில் ஒரே ஆயுதம்  அல்ல, மாறாக கீழ்க்கண்ட இரண்டு தனி தொழில்நுட்பங்களைக் குறிக்கிறது

சூப்பர்சானிக் ஏவுகணை (Supersonic Missile): ஒலியின் வேகத்தை விட வேகமாக (Mach 1) செல்லும் ஒரு ஏவுகணை. இது நீண்ட தூர இலக்குகளை அழிக்க அல்லது எதிரி தற்காப்புக்களை ஊடுருவ பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

டார்ப்பிடோ (Torpedo): நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அல்லது கப்பலில் இருந்து ஏவப்படும் சுய-செலுட்டு நீருக்கடியில் வெடிக்கும் கருவி. டார்ப்பிடோக்கள் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது கப்பல்களை தாக்குவதற்கும் மூழ்கடிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பமே சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை ஆகும்.

சூப்பர்சானிக் ஏவுகணை உதவியுடன் டார்ப்பிடோ ஏவுதல் (SMART - Supersonic Missile-Assisted Release of Torpedo): இது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பு. SMART அமைப்பு நீண்ட தூரங்களில் ஒரு லேசான டார்ப்பிடோவை ஏவுவதற்கு ஒரு சூப்பர்சானிக் ஏவுகணையைப் பயன்படுத்துகிறது. இது டார்ப்பிடோவின் சொந்த வரம்புக்கு அப்பாற்பட்ட இலக்குகளை அடைய அனுமதிக்கிறது. SMART அமைப்பு மே 2024 இல் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது 


விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு தகவல் தொடர்பை ஏற்படுத்தி நாசாவின்  சைக் விண்கலம் (spacecraft Psyche)  சாதனை படைத்துள்ளது. சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய 2023-ம் ஆண்டு அக்டோபரில்  அனுப்பப்பட்ட இந்த விண்கலமானது, லேசர் தொலைதொடர்பு பற்றிய பரிசோதனையிலும் ஈடுபடும் பணியை மேற்கொண்டு உள்ளது. இதற்காக டி.எஸ்.ஓ.சி. எனப்படும், விண்வெளியின் ஆழ்ந்த ஒளி வழியான தொலைதொடர்புகளை கண்டறியும் சாதனம் சைக் விண்கலத்தில் உள்ளது.

இந்த நிலையில், டி.எஸ்.ஓ.சி. தொழில்நுட்பம் அதன் திறனை நிரூபித்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து அந்த விண்கலம் பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த தொலைவானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை போன்று 1.5 மடங்கு கொண்டது.


3.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் பூமியின் காந்தப்புலத்தின் பழமையான சான்றுகளை (the oldest evidence of Earth’s magnetic field) கிரீன்லாந்தின் இசுவா சுப்ராக்ரஸ்டல் பெல்ட்டில் (Isua Supracrustal Belt),  MIT மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த கண்டுபிடிப்பின் மூலம், பூமியின் நிலைமைகள் முன்பு நினைத்ததை விட முன்னதாகவே வாழக்கூடியதாக இருந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.  

பூமியின் காந்தப்புலத்தின் முக்கியத்துவம்

பூமியின் காந்தப்புலம் தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்வீச்சு மற்றும் காஸ்மிக் கதிர்களில் இருந்து கிரகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு நிலையான வளிமண்டலத்தைத் தக்கவைக்க உதவுகிறது மற்றும் திரவ நீரின் இருப்பை அனுமதிக்கிறது, இது உயிர்கள் வாழ்வதற்கு மிக அவசியம். பூமியின் காந்தப்புலத்தின் வரலாறு மற்றும் வலிமையைப் புரிந்துகொள்வது, பூமியின் பரிணாம வளர்ச்சி மற்றும் உயிர்களை ஆதரிக்கும் திறனைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.


உலகின் மிக ஆழமான நீல துளை ”Taam Ja’ Blue Hole (TJBH)” மெக்சிகோவில் யுகடன் தீபகற்பத்தில் உள்ள செட்டுமல் விரிகுடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய அளவீடுகள் TJBH குறைந்தது 1,380 அடி (420 மீட்டர்) கடல் மட்டத்திற்கு கீழே நீண்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் மிக ஆழமான நீல துளையாக தென் சீனக் கடலில் உள்ள சான்ஷா யோங்கிள் ப்ளூ ஹோல் (டிராகன் ஹோல் என்றும் அழைக்கப்படுகிறது) 390 அடி (119 மீட்டர்)  கருதப்பட்டது. 

நீல துளைகள் (Blue Holes) என்றால் என்ன ? 

நீல ஓட்டைகள் (Blue Holes) நீர் நிரப்பப்பட்ட செங்குத்து குகைகள் அல்லது சுண்ணாம்பு, பளிங்கு அல்லது ஜிப்சம் போன்ற கரையக்கூடிய அடிபாறையுடன் கடலோரப் பகுதிகளில் காணப்படும் மூழ்கும் துளைகள் ஆகும்.

மேற்பரப்பு நீர் பாறை வழியாக ஊடுருவி, தாதுக்களைக் கரைத்து விரிசல்களை விரிவுபடுத்தும் போது அவை உருவாகின்றன, இறுதியில் பாறை இடிந்து விழும்.

நீல துளைகள் பொதுவாக புதிய, கடல் அல்லது கலப்பு வேதியியலின் அலை தாக்கம் கொண்ட நீரைக் கொண்டிருக்கின்றன மற்றும் நீரில் மூழ்கிய குகைப் பாதைகளுக்கு அணுகலை வழங்கலாம். 


குவஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ள "LOQU" தொழில்நுட்பம் : குரல் தண்டு அதிர்வு சமிக்ஞைகளிலிருந்து (vocal cord vibration signals) நேரடியாக மனித பேச்சு சமிக்ஞைகளை உருவாக்கும் ஒரு புதிய முறையான "LOQU" ஐ குவஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.  இந்த புதுமையான அணுகுமுறை, தொண்டையில் வைக்கப்பட்டுள்ள சென்சார்களைப் பயன்படுத்தி,  குரல் தண்டு அதிர்வுகளிலிருந்து பேச்சு சமிக்ஞைகளை மறுகட்டமைக்க அனுமதிக்கிறது, பேச்சு குறைபாடுள்ள நபர்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளுக்கு நம்பிக்கைக்குரிய பயன்பாடுகளை வழங்குகிறது. 

“LOQU” என்ற வார்த்தைக்கு இலத்தின் மொழியில் ‘பேசு’ (To speak or talk) என்று பொருள்படும்.  


தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியா ஸ்டாக் (India Stack) அல்லது இந்திய குடிமக்கள் ஸ்டாக் (India’s Citizen Stack)  என்றால் என்ன?

இந்தியாவின் குடிமக்கள் ஸ்டாக் ((India’s Citizen Stack))   என்பது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும், இது ஒரு வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை செயல்படுத்தவும், இந்தியாவில் நிர்வாகத்தை மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் அடையாளம், டிஜிட்டல் பணம் செலுத்துதல், தரவு பரிமாற்றம் மற்றும் குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பிற சேவைகளை எளிதாக்குவதற்கான கருவிகள் மற்றும் தளங்களின் தொகுப்பை வழங்குகிறது. இந்தியா ஸ்டாக் என்பது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இது பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஸ்டாக்கின் சிறந்த உதாரணமாக ஆதார், eSign, Digilocker மற்றும் Unified Payments Interface (UPI) ஆகியவற்றைக் கூறலாம். 


மெயின்ஸ் கட்டுரைகள்  

சொத்து வாரிசுரிமை வரி  (inheritance tax) 


இந்தியாவில் வாரிசு சொத்துரிமை வரி  (inheritance tax)  

மக்களிடையே செல்வத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ளவும், வருவாய் பகிா்வில் சமநிலையை உருவாக்கவும்,  வருமான இடைவெளியைக் குறைக்கவும் வாரிசு சொத்துரிமை வரி (inheritance tax)  1953-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5% முதல் அதிகபட்சம் 85% வரை வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாரிசுகளுக்கு மாறினால் இந்த வரியை செலுத்தியாக வேண்டிய சூழல் இருந்தது. ரூ.20 லட்சத்துக்கு மேலான சொத்துகளுக்கு 85% வரை வரி விதிக்கப்பட்டது. பின்னா் இந்த வரிவிதிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டு, 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அரசால் இந்த வரி ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் செல்வம் தொடர்பான பிற வரிகள் இருந்தன. இவற்றில் செல்வ வரி (wealth tax) மற்றும் Read more . . .



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.