-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 4 May 2024

 தமிழ்நாடு

கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் (93) காலமானார். 

  • 2021-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதை தமிழக அரசு இவருக்கு வழங்கி கவுரவித்தது. 

  • இவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில், சிறு கிராமத்தில் பிறந்தவர். 

  • கடந்த 1953-ல் தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்த சண்முகநாதன், 70 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

  • ஒரு தமிழன் பார்வையில் 20-ம் நூற்றாண்டு, கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை என்பது உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.


தமிழ்நாட்டில் முதல்முறையாக, இரண்டு கைகளையும் இழந்த சென்னையைச் சேர்ந்த தான்சென் என்ற இளைஞருக்கு கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ்  வழங்கப்பட்டுள்ளது. 

 

PUCC 2.0 மென்பொருள் : வாகனங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்குவதற்கான PUCC 2.0 (Pollution under control certificate (PUCC)) என்ற புதிய மென்பொருளை மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் (State Transport and Road Safety Commissionerate)  அறிமுகப்படுத்தியுள்ளது

இதன் மூலம், இந்தியாவில் மாசுக் கட்டுபாடு சான்றிதழ் பெற PUCC 2.0செயலியை அறிமுகப்படுத்திய மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சுமாா் 534 மாசு உமிழ்வு பரிசோதனை மையங்கள் கொண்ட தமிழகத்தில் இந்த நடைமுறை மே 6 முதல் அமல்படுத்தப்படுகிறது.


தமிழ்நாடு அரசின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் : 

  • பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000 லிருந்து ரூ.12,000 ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • பணிக்காலத்தில் இயற்கை எய்திடும் பத்திரிகையாளர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவித் தொகை ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுவரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ2 இலட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

  • சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 இலட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய ‘கலைஞர் எழுதுகோல் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 

இந்தியா

இந்தியாவின் முதல் அரசியலமைப்பு பூங்கா (Constitution Park) புனேவில்  3.5.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய ராணுவமும் புனித் பாலன் குழுவும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. 

உலகம்

சாலமன் தீவுகளின்  புதிய பிரதமராக ஜெரேமியா மானேல் (Jeremiah Manele) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கூ.தக. : சாலமன் தீவுகளின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தலைநகரம் - ஹொனியாரா மற்றும் நாணயம் -சாலமன் தீவுகள் டாலர் 

வெளிநாட்டு உறவுகள்

UPI  போன்ற கட்டண முறையை உருவாக்குவது தொடர்பாக இந்தியா - நபீபியா ஒப்பந்தம் : 

இந்தியாவின் தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின் (National Payments Corporation of India (NPCI))  சர்வதேச பணபரிவர்த்தனை லிமிடெட்( International Payments Limited (NIPL))  மற்றும்  நமீபியா குடியரசின் மத்திய வங்கியான நமீபியா வங்கியுடன் (Bank of Namibia (BoN))  UPI  போன்ற ஒரு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை உருவாக்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.    இந்த கூட்டாண்மை மூலம், நமீபியா வங்கி  அந்நாட்டில்  ஒரு வலுவான டிஜிட்டல் தளத்தை உருவாக்க, NIPL இலிருந்து தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவுக்கான அணுகலைப் பெறும்.


  இந்திய நீர்மின் நிறுவனம் ( (National Hydroelectric Power Corporation Limited), ஒரு புதிய வகை மிதக்கும் சூரிய தொழில்நுட்பத்தை சோதிக்க நார்வே நிறுவனமான Ocean Sun AS உடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் நெகிழ்வான, மிதக்கும் தளங்களில் வைக்கப்படும் சோலார் பேனல்களைப் பயன்படுத்துகிறது. NHPC மற்றும் Ocean Sun ஆகியவை சூரிய சக்தியை உருவாக்க NHPC தேர்ந்தெடுத்த இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராயும்.

முக்கிய தினங்கள்

உலக பத்திரிகை சுதந்திர நாள் - மே 3 

கூ.தக. : 1992-இல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் நினைவாக, மே 3-ஆம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை ’உலகப் பத்திரிகை சுதந்திர நாள்’-ஆக 1993-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது.


உலக நோய்த்தடுப்பு வாரம் - ஏப்ரல் 24 முதல் 30  

உலக சுகாதார அமைப்பின் நோய்த்தடுப்புக்கான அத்தியாவசியத் திட்டம் (Essential Programme on Immunization (EPI))  தொடங்கப்பட்டு  50வது ஆண்டுகள் ஆகியுள்ளது.  

1974 இல் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை தடுப்பூசிகளை அணுகுவதை உறுதி செய்யும் இலக்குடன் தொடங்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) நோய்த்தடுப்புக்கான அத்தியாவசியத் திட்டம் (EPI) என்பது தடுப்பூசிகள் மூலம் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய திட்டமாகும். 

அறிவியல் தொழில்நுட்பம் 

நிலவின் தென் துருவ ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் “சாங்'இ-6” (Chang'e-6): 

நிலவின் இருண்ட பகுதிக்கு அதாவது நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பி, அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்கான, சாங்'இ-6” விண்கலம் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்வாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்8 என்ற ராக்கெட் மூலம் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திரனின் தென் துருவத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் இந்த திட்டம், நிலவு ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சி என்று சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


வெப்ப அலை அதிகரிப்புக்கு காரணம் என்ன ? 

இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்குக் காரணம், காலநிலை மாற்றம் மட்டும் அல்ல, கோடை மழை குறைந்தது, எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது ஆகியவையும் அதற்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெர்வித்துள்ளார்.  

விளையாட்டு

இந்திய செஸ் வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு கிராண்ட் மாஸ்டர் (GrandMaster(GM)) பட்டத்தை  சர்வதேச செஸ் கூட்டமைப்பு (International Chess Federation(FIDE)) அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.

  • பிரக்னாநந்தாவின் சகோதரியான இவர், உலகின் முதல் கிராண்ட் மாஸ்டர் சகோதர-சகோதரி ஜோடி எனும் பெருமையைப் பெற்றுள்ளனர். 

  • 84வது இந்திய GM மற்றும் சர்வதேச அளவில் 42வது பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் இந்திய அளவில்  கோனேரு ஹம்பி (2002) மற்றும் ஹரிகா துரோணவல்லி (2011) ஆகியோருக்குப் பிறகு GM ஆன 3வது இந்தியப் பெண் வைஷாலி ரமேஷ்பாபு ஆவார்.


ஐசிசி தரவரிசை வெளியீடு : 

  • 3.5.2024 அன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையின் படி, வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான அணிகளுக்கான (ஒருநாள் மற்றும் டி20) தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியை பொறுத்தவரையில், இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.

  • டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 120 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது.

  • ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (122 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (116 புள்ளிகள்) மற்றும் தென்னாப்பிரிக்கா (112 புள்ளிகள்) அணிகள் உள்ளனர்.

  • டி20 தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (264 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (257 புள்ளிகள்) மற்றும் இங்கிலாந்து (252 புள்ளிகள்) அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

நன்றி : தினமணி 

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

‘Just A Mercenary?: Notes from My Life and Career’ என்ற புத்தகத்தை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் எழுதியுள்ளார்.  




கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.