இந்தியா
இந்தியாவின் பொதுத் தேர்தலைக் காண இதுவரை இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையிலான உலகளாவிய பிரதிநிதிகள் குழு இந்தியா வருகை :
இந்திய தேர்தல் ஆணையத்தின் பாரம்பரியத்திற்கு இணங்க, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024ன் அளவு மற்றும் அந்தஸ்துக்கு ஏற்ப, பூட்டான், மங்கோலியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஃபிஜி, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, மால்டோவா, துனிசியா, செஷெல்ஸ், கம்போடியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, ஜிம்பாப்வே, பங்களாதேஷ், கஜகஸ்தான், ஜார்ஜியா, சிலி, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் நமீபியா ஆகிய 23 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் இந்தியாவின் பொதுத் தேர்தல்களைக் காண இந்தியா வந்துள்ளனர்.
தேர்தல் அமைப்புகளுக்கான சர்வதேச அறக்கட்டளையின் உறுப்பினர்கள், பூட்டான் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த ஊடகக் குழுக்களும் பங்கேற்கின்றன.
பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு தொகுதிகளில் தேர்தல் மற்றும் அது தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிடுவார்கள். இந்த நிகழ்ச்சி 2024 மே 9 ஆம் தேதி முடிவடையும். இந்தத் திட்டம் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் தேர்தல் முறையின் நுணுக்கங்களையும், இந்தியத் தேர்தலில் சிறந்த நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தும்.
ஐ.நாவில் இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் :
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர அமைப்பு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை இணைந்து ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்துடன் இணைந்து மே 3 அன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையக செயலக கட்டிடத்தில் ஏற்பாடு செய்த சிபிடி57 துணை நிகழ்வில் ( CPD57 Side Event ) இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
"நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்: இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகிறார்கள்" (Localizing the SDGs: Women in Local Governance in India Lead the Way) என்ற தலைப்பில் நடந்த இந்த கூடுகையில், திரிபுராவைச் சேர்ந்த திருமதி சுப்ரியா தாஸ் தத்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி குனுகு ஹேமா குமாரி, ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி நீரு யாதவ் ஆகிய மூன்று புகழ்பெற்ற பெண் பிரதிநிதிகளின் பயனுள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
இவர்கள் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பல கருப்பொருள் பகுதிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதில் தங்களது அனுபவங்களையும் புதுமைகளையும் பகிர்ந்து கொண்டனர். குழந்தை திருமணங்களை எதிர்த்துப் போராடுவது முதல் சுகாதாரம், கல்வி, வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவது வரை, இந்த பெண்கள் அடித்தட்டு அளவில் தலைமையின் உருமாறும் சக்தியை எடுத்துக்காட்டினர். அவர்கள் தங்கள் தலைமைத்துவ பயணத்தில் எதிர்கொண்ட மற்றும் கடந்து வந்த சவால்கள் மற்றும் போராட்டங்களை வெளிப்படுத்தினர்.
‘KAVACH’ திட்டங்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்துவதற்காக, RailTel Corporation of India Limited (RailTel) மொஹாலியை (பஞ்சாப்) சார்ந்த Quadrant Future Tek Limited இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூ.தக. :
‘KAVACH’ என்பது இந்திய ரயில்வேயின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு / ரயில் பாதுகாப்பு (automatic train protection (ATP)) அமைப்பாகும். இது ஜூலை 2020 இல் ரயில்வே அமைச்சகத்தால் "தேசிய ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு முறையாக" (National ATP System) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தணிக்கைத் துறை ஒத்துழைப்பிற்கான இந்தியா - நேபாள ஒப்பந்தம் :
இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General(CAG)) கிரிஷ் சந்திர முர்மு, நேபாளத்தின் தலைமை ஆடிட்டர் ஜெனரல் டோயம் ராயாவுடன், தணிக்கை துறையில் ஒத்துழைப்பையும், நிபுணத்துவப் பரிமாற்றத்தையும் மேம்படுத்த, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.2024 மே 2 ஆம் தேதி கிரிஷ் சந்திர முர்மு நேபாளத்திற்கு மேற்கொண்ட அலுவல்ரீதியான பயணத்தின் ஒரு பகுதியாக ஓரத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Flying Wedge Defense 200B (FWD-200B) என்ற பெயரில் இந்தியாவின் முதல் உள்நாட்டு ராணுவ தர ஆளில்லா குண்டுவீச்சு விமானத்தை (Unmanned Combat Aerial Vehicle (UCAV)) பெங்களூருவைச் சார்ந்த Flying Wedge Defense and Aerospace Technologies Private Limited அறிமுகம் செய்துள்ளது.
உலகம்
செர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 7000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றம் :
வடகிழக்கு செர்பியாவில் Tamiš ஆற்றின் அருகே 7000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இக்குடியிருப்பு புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் இருந்ததாக நம்பப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் குடியேற்றத்தின் அளவை வரைபடமாக்க புவி இயற்பியல் முறைகளைப் பயன்படுத்தினர், வின்கா கலாச்சாரத்துடன் தொடர்புடைய கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடகிழக்கு செர்பியாவில் Tamiš ஆற்றின் அருகே 7000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இக்குடியிருப்பு புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் இருந்ததாக நம்பப்படுகிறது
ஆராய்ச்சியாளர்கள் குடியேற்றத்தின் அளவை வரைபடமாக்க புவி இயற்பியல் முறைகளைப் பயன்படுத்தினர், வின்கா கலாச்சாரத்துடன் (Vinca culture) தொடர்புடைய கலைப்பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்ப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
வின்கா கலாச்சாரம் (Vinca culture) பற்றி . . .
வின்கா கலாச்சாரம் என்பது, தென்கிழக்கு ஐரோப்பா பகுதியில், குறிப்பாக இன்றைய நவீன செர்பியாவில் கிமு 5700 மற்றும் 4500 க்கு இடையில் தளைத்தோங்கிய வரலாற்றுக்கு முந்தைய நாகரிகமாகும். மேம்பட்ட விவசாய நடைமுறைகள் மற்றும் தனித்துவமான மட்பாண்ட பாணிகளுக்கு பெயர் பெற்ற வின்கா கலாச்சாரம் ஆரம்பகால ஐரோப்பிய நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் பெரிய குடியேற்றங்களில் வாழ்ந்தனர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நடைமுறைப்படுத்தினர். இந்த கலாச்சாரம் கிமு 4500 இல் கலாச்சாரம் வீழ்ச்சியடைந்தது. அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
வெளிநாட்டு உறவுகள்
பாகிஸ்தானில் ‘யோகா’ அதிகாரபூா்வமாக அறிமுகமாகியுள்ளதாக பாகிஸ்தானின் ‘தலைநகா் மேம்பாட்டு ஆணையம் (சிடிஏ)’ தனது முகநூல் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளது.
கூ.தக. : இந்தியா உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக ஐ.நா. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி அங்கீகரித்தது. முன்னதாக, சா்வதேச யோகா தினத்தை நிறுவுவதற்கான வரைவு தீா்மானம் இந்தியவால் முன்மொழியப்பட்டு, 175 உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடா அரசினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக ஆசிய வளா்ச்சி வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 சதவீத மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனா். இது பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கூ.தக : மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு உச்ச வயது வரம்பு 65-ஆக இருந்த நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளா்ச்சி ஆணையம் அந்த உச்சவரம்பை அண்மையில் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
OECD இன் “பொருளாதாரக் கண்ணோட்டம்” (Economic Outlook) அறிக்கை, 2024-25க்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 6.2% இல் இருந்து 6.6% ஆக உயர்த்தியுள்ளது. இந்த அறிக்கை மே 2, 2024 அன்று வெளியிடப்பட்டது.
விருதுகள்
அஸ்ஸாமைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் பூர்ணிமா தேவி பர்மனுக்கு, வைட்லி ஃபண்ட் ஃபார் நேச்சரால் (Whitley Fund for Nature (WFN)) வைட்லி தங்க விருது 2024 (Whitley Gold Award 2024) என்ற 'பசுமை ஆஸ்கார்' (Green Oscar) விருது லண்டனில் நடந்த ராயல் ஜியோகிராபிகல் சொசைட்டி விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது.
டாக்டர் பூர்ணிமா தேவி அவர்களின், அழிந்து வரும் பெரிய நாரை (Greater Adjutant Stork ) (உள்ளூரில் அசாமிய மொழியில் 'ஹர்கிலா' (Hargila) என்று அழைக்கப்படுகிறது) மற்றும் அதன் ஈரநில வாழ்விடத்தை பாதுகாக்கும் முயற்சிகளை இந்த விருது அங்கீகரித்துள்ளது. . 'ஹர்கிலா பைடேயு (நாரைகளின் சகோதரி)' என்று அழைக்கப்படும் பூர்ணிமா தேவி, பெரிய நாரைகளைக் (Greater Adjutant Stork ) காப்பாற்றுவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக வடகிழக்கு இந்தியாவில் பெரிய நாரைகளின் எண்ணிக்கை 40 லிருந்து 1800 ஆக பெருகியுள்ளது.
முக்கிய தினங்கள்
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் (International Firefighters’ Day) - மே 4
சர்வதேச சிறுத்தைகள் தினம் (International Leopard Day) - மே 3
ஐ.நா. உலக சூரைமீன் தினம் (United Nations’ World Tuna Day) - மே 2
நியமனங்கள்தேசிய சிறு தொழில் கழக லிமிடெட் (National Small Industries Corporation Limited (NSIC)) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக டாக்டர். சுப்ரான்சு சேகர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். மினி ரத்னா (வகை-II) நிறுவனமான தேசிய சிறு தொழில் கழக லிமிடெட் (National Small Industries Corporation Limited (NSIC)) ஒன்றிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (Goods and Services Tax Appellate Tribunal (GSTAT)) தலைவராக ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய குமார் மிஸ்ராவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ( Appointment Committee of the Cabinet (ACC)) ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து 4 ஆண்டுகள் அல்லது 70 வயதை அடையும் வரை, எது முந்தையதோ அந்த பதவியில் இருப்பார்.
சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (GSTAT) பற்றி:
GSTAT என்பது, ஜிஎஸ்டி தொடர்பான தகராறுகளைத் திறமையாகக் கையாள்வதற்கான ஒரு சிறப்பு அமைப்பாகும்.
ஜிஎஸ்டி சட்டங்களில் இரண்டாவது மேல்முறையீட்டு மன்றம் மற்றும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தகராறு தீர்வுக்கான முதல் பொது மன்றமாகும்.
வியாபாரத் துறையில் உள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக இந்திய அரசு GSTATஐ நிறுவியது. Appointment Committee of the Cabinet (ACC) அமைப்பு ஜூலை 1, 2024 முதல் செயல்பாடுகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
GSTAT என்பது மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகளைக் கையாள டெல்லியில் ஒரு முதன்மை பெஞ்சைக் கொண்டிருக்கும்; மற்றும் 31 மாநில பெஞ்சுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள கட்டணங்கள் உட்பட மற்ற அனைத்து பிரச்சினைகளைக்கு தீர்வு காண வேண்டும்.
உத்தரப் பிரதேசம் அதிகபட்சமாக 3 பெஞ்சுகளைக் கொண்டிருக்கும்.
குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு , மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற பெரிய மாநிலங்களில் தலா 2 பெஞ்சுகள் இருக்கும்.
அறிவியல் தொழில்நுட்பம்
மெழுகுவர்த்தி மெழுகு மூலம் இயங்கும் ராக்கெட் "SR75" ஐ ஜெர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனமான ஹைஇம்பல்ஸ் (HyImpulse) மே 3, 2024 அன்று தெற்கு ஆஸ்திரேலியாவின் கூனிப்பாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட்டானது, பாரஃபின் (மெழுகுவர்த்தி மெழுகு) (paraffin (candle wax) மற்றும் திரவ ஆக்ஸிஜனால் (liquid oxygen) எரிபொருளாகிறது.
விளையாட்டு
இந்திய சிறப்பு ஒலிம்பிக்ஸ் (Special Olympics India) தலைவர் டாக்டர். மல்லிகா நட்டா சிறப்பு ஒலிம்பிக் ஆசிய-பசிபிக் ஆலோசனைக் குழுவின் (Special Olympics Asia-Pacific Advisory Council(APAC)) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1 மே 2024 முதல் 31 மார்ச் 2027 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பை வகிப்பார்.
BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 (BWF World Junior Badminton Championships 2025 ) அசாம் மாநிலத்திலுள்ள குவஹாத்தியில் நடைபெற உள்ளது.
2008-க்குப் பிறகு முதல் முறையாக உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது.
தெரிந்துகொள்ளுங்கள்இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் 4.05.2024 அன்று கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுள்ளது.1954-ம் ஆண்டு இதே நாளில், பிரபல மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை குத்துச்சண்டைப் போட்டியில் வெறும் 1 நிமிடம் 34 நொடிகளில் ஹமிதா பானு தோற்கடித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.