-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 19,20 May 2024

 தமிழ்நாடு

‘தந்தி 1' (Thanthi One) என்ற புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலை தந்தி குழுமம் தொடங்கியுள்ளது. 

இந்தியா

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார். 1980-களில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, ஐசிஐசிஐ வங்கியானது தொடங்கப்பட்டபோது, அந்த வங்கியின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் வாய்ப்பினை வாகுல் அடைந்தார். 1996-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற வாகுல், 2009-ஆம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியின் செயல்சாரா இயக்குநராக இருந்தார்.வங்கித்துறையில் இவரது சேவையைப் பாராட்டும் விதமாக 2010ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி  மரணம் 19.5.2024 அன்று மரணமடைந்தார்.  அதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பிய போது  ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி  மரணம் அடைந்தார். 

வெளிநாட்டு உறவுகள்

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்களைக் கொண்டு சென்ற மரியானா டனிகா (Marianne Danica) சரக்கு கப்பலை ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள ஸ்பெயின் நாடு அனுமதி மறுத்துள்ளது. இந்த கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முக்கிய தினங்கள்

சர்வதேச அருங்காட்சியங்கள் தினம் (International Museum Day) - மே 18

மையக்கருத்து 2024 - கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகங்கள் (Museums for Education and Research)


உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day) - மே  18

நியமனங்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிா்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவா் மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும் செயல்படுவாா் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6-ன் படி இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அறிவியல் தொழில்நுட்பம் 

அமெரிக்காவின் முதல் கருப்பின விண்வெளி வீரர் எட் டுவைட் (Ed Dwight), சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு  தனது 90 வது வயதில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்கலத்தில் அவர் பயணித்தார்.   


இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவை  19.05.2024 அன்று  எலான் மஸ்க்கினால்  தொடங்கி வைக்கப்பட்டது. 


1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான ராட்சத வைரஸ் ”Giant virus" அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellowstone National Park) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த வைரஸ்கள்  ராட்சத வைரஸ் ”Giant virus" என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவற்றின் மரபணுக்கள் வழக்கமான வைரஸ்களை விட கணிசமாக பெரியவை. குறிப்பிடத்தக்க வகையில், இந்த பண்டைய வைரஸ்கள் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இந்த பண்டைய வைரஸ்களின் கண்டுபிடிப்பு பூமியின் முதல் ஒற்றை செல் உயிரினங்கள் வெளிவரத் தொடங்கிய சகாப்தத்தைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானது.

கூ.தக. : 1872 இல் நிறுவப்பட்ட எல்லோஸ்டோன் தேசிய பூங்கா உலகின் முதல் தேசிய பூங்கா ( first national park in the world) என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 

விளையாட்டு

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், உயரம் தாண்டுதல் போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டிகள் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்றன. 


இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்  (ஜெர்மனி), நிகோலஸ் ஜாரியை (சிலி) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்தது.


பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் -சிராக் ஜோடி, சீனாவின் சென் போ யாங் - லியு யி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


FIFA பெண்கள் உலகக் கோப்பை 2027 (FIFA Women’s World Cup 2027) பிரேசிலில் நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.