தமிழ்நாடு
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக 30.4.2024 அன்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில அதிகாரிகளும் ஆன்லைனில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து அரசு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார்.
தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
- இரண்டாம் உலகப்போரின்போது சியாம்(தாய்லாந்து) - பர்மா ரெயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் 01.05.2024 அன்று தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் "நடுகல்" திறப்பு விழா நடைபெற்றது.
- தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
உலகம்
இஸ்ரேலுக்கு எதிரான வழக்கில் இணைந்த துருக்கி : ஐக்கிய நாடுகள் இனப்படுகொலை மாநாட்டின் நெறிமுறைகளை மீறி இஸ்ரேல் காஸாவில் தாக்குதல் நடத்திவருவதாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கில் துருக்கி அதிகாரப்பூர்வமாக இணைவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.
விருதுகள்
2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு (Goldman Environmental Prize for 2024), இந்தியாவின் சத்தீஸ்கரைச் சேர்ந்த 43 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் அலோக் சுக்லாவிற்கு அறிவிக்க்கப்பட்டுள்ளது.
கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு பற்றி . . .
"பசுமை நோபல்" என்று அழைக்கப்படும் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு, இந்த பரிசு இயற்கை சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக தனிநபர்களை கவுரவிக்கிறது.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, தீவுகள் மற்றும் தீவு நாடுகள், வட அமெரிக்கா மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய ஆறு புவியியல் பிரிவுகளைச் சேர்ந்த அடிமட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
1989 இல் ரிச்சர்ட் மற்றும் ரோடா கோல்ட்மேன் ஆகியோரால் நிறுவப்பட்டது.
பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் $200,000 மற்றும் விருது வழங்கப்படுகிறது.
சுற்றுசூழல்
திருநெல்வேலியில் உருவாகிவரும் மேலும் ஒரு பறவைகள் சரணாலயம் :
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போதுள்ள கூந்தங்குளம் (Koonthankulam) மற்றும் திருப்புடைமருதூரில் (Thirupudaimaruthur) உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக திருநெல்வேலியில் புதிய பறவைகள் சரணாலயம் உருவாக்கப்படுகிறது.தேடியூரில் (Thadiyoor) இந்த பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வண்ணமயமான நாரைகள் (painted storks), மற்றும் பெலிகன் (pelican) ஆகியவை குறிப்பிடத்தக்க பறவைகளாகும்.
விளையாட்டு
ஐசிசி ஆடவர் டுவென்டி 20 - சர்வதேச (T20I) உலகக் கோப்பை 2024 (ICC Men’s Twenty20 - International (T20I) World Cup 2024) இன் நல்லெண்ணத் தூதுவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council (ICC)) நியமித்துள்ளது. இந்த போட்டிகளை ஜீன் 1-29, 2024 தினங்களில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்துகின்றன.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2024 (ICC Women’s T20 World Cup Qualifier 2024) இன் நல்லெண்ணத் தூதுவராக பாகிஸ்தான் முன்னாள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான சனா மிர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் 2024 ஏப்ரல் 25 முதல் மே 7 வரை நடைபெறுகிறது.
புத்தகங்கள் & ஆசிரியர்கள்
’The Winner’s Mindset’ என்ற புத்தகத்தை முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் ராபர்ட் வாட்சன் எழுதியுள்ளார்.
மெயின்ஸ் ஸ்பெசல்
தெருவோர வியாபாரிகள் சட்டம் (Street Vendors Act)
தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம் (Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act) மே 1, 2014 அன்று அமலுக்கு வந்தது. இச்சட்டமானது, இடம், நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய அனைத்தும் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதை காட்டுகிறது.
இந்த சட்டத்தை அமலாக்கம் செய்வதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் திட்டங்கள் உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies (ULBs)) தங்கள் சொந்த விதிகள் மற்றும் திட்டங்களுடன் சட்டம் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பில் உள்ளன.
சட்டத்தின் அம்சங்கள் Read more . . .
- - - - -
உச்ச நீதிமன்றத்தின் VVPAT தீர்ப்பு பற்றி . . .
26.04.2024 அன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) எண்ணிக்கைக்கு எதிராக VVPAT சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
புதிய மாற்றங்கள் என்னென்ன ? Read more ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.