Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 8 May 2024

 உலகம்

ரஷியாவின்  அதிபராக 5-ஆவது முறையாக விளாதிமீா் புதின் பொறுப்பேற்றார். ஏற்கெனவே ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக ரஷியாவின் தலைமைப் பொறுப்பை நீண்ட காலம் வகித்துள்ள புதின், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பெயரளவு அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து வரும் 2030 வரை அந்தப் பதவியில் நீடிப்பாா். அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ், அதற்குப் பிறகும் அதிபா் தோ்தலில் புதினால் போட்டியிட முடியும்.


வெளிநாட்டு உறவுகள்

இந்தியாவுக்கான புதிய சீன தூதராக  சூ ஃபெய்காங்கை அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் நியமித்துள்ளார்.லடாக் எல்லை மோதல் பிரச்னையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கான தூதரை சீன அறிவித்துள்ளது.


கானாவில் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface (UPI)) : 

 கானாவின் வங்கிகளுக்கிடையேயான பணப்பரிவர்த்தனை முறைமையில்  (Ghana Interbank Payment and Settlement Systems (GHIPSS)) இந்தியாவின் தேசிய பணபரிவர்த்தனை நிறுவனத்தின்    (National Payments Corporation of India (NPCI) ) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (Unified Payment Interface (UPI)) 6 மாத காலத்திற்குள் செயல்படுத்த இந்தியாவும் கானாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

 

பொருளாதாரம்

கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புள்ளவிவரத்தின்படி, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. அதன் பின்னா், அந்த சேமிப்புகளில் சரிவு ஏற்படத் தொடங்கியது.

சேமிப்புகள் 5 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2022-23-ஆம் ஆண்டில் ரூ.14.16 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கு முன்பு 2017-18-ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.13.05 லட்சம் கோடியாக மிகவும் சரிந்தது.

முக்கிய தினங்கள்

 சர்வதேச உணவு இல்லா தினம் (International No Diet Day) - மே 6

சர்வதேச உணவு இல்லா தினத்தின் சின்னம் வெளிர் நீல நிற ரிப்பன் ( light blue ribbon) ஆகும். 


உலக கார்ட்டூனிஸ்ட் தினம் (World Cartoonist Day) - மே 5  

நியமனங்கள் 

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF (United Nations Children’s Fund))  இந்தியாவிற்கான  தேசிய பிரபல தூதராக (National celebrity Ambassador) பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானை நியமித்துள்ளது. குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி, சுகாதாரம், கல்வி மற்றும் பாலின சமத்துவத்திற்கான குழந்தைகளின் உரிமைகளுக்காக அவர் பணியாற்றுவார். 


ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் இந்திய பிரிவின் (UNICEF India) குழந்தைகளின் உரிமைகளுக்காக புதிய இளைஞர் நல்லெண்ண தூதுவர்களாக (youth advocates for rights of children) கௌரன்ஷி ஷர்மா, நஹித், வினிஷா, கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அறிவியல் தொழில்நுட்பம் 

அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited (BSNL)) ஆகஸ்ட் 2024 முதல் தேசிய அளவில் 4ஜி சேவைகளை வழங்க உள்ளது.

விளையாட்டு

மும்பை சிட்டி எஃப்சி அணி மோகன்பகான் சூப்பா் ஜெயன்ட் அணியை  வீழ்த்தி   இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) 2023-24  கால்பந்து  சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.


ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றாா். இந்தப் போட்டியில் அவா் வாகை சூடியது இதுவே முதல் முறையாகும்.

மேலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில்,   ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா்.


கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot