Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

TNPSC நடப்பு நிகழ்வுகள் 1 மே 2025

 Tamil Nadu (Unit V)  

'தமிழ் வார விழா'  -  பாரதிதாசனின் 135-ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாடு அரசினால் கொண்டாடப்படுகிறது.  பாரதிதாசன் (இயற்பெயர் : கனக சுப்புரத்தினம்) 29 ஏப்ரல் 1891 அன்று புதுச்சேரியில் பிறந்தார்.


"தமிழ்நாடு மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம்" (Tamil Nadu Electronics Components Manufacturing Scheme), மாநிலத்தில் மின்னணு உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு. எம்.கே. ஸ்டாலின் (Thiru. M.K. Stalin) அவர்களால் 30.04.2025 அன்று தொடங்கப்பட்டது.  

  • தமிழ்நாடு ஏற்கனவே மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தேசிய அளவில் முன்னணி வகிக்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கவும், குறைக்கடத்தி (Semiconductor) துணைத் துறைகளில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கையை (Tamil Nadu Semiconductor and Advanced Electronics Policy 2024) அறிமுகப்படுத்தியது.  

  • இந்தக் கொள்கை தமிழ்நாடு மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னணியாக உருவெடுக்க வழிவகுத்துள்ளது. மின்னணு உற்பத்தி சூழலை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு இப்போது மின்னணு உபகரணங்கள் உற்பத்தியை மையப்படுத்திய இந்த சிறப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது.  

  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY - Ministry of Electronics and Information Technology) மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ் பயன்பெறும் நிறுவனங்களை ஈர்க்க, தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசின் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மானியங்களுக்கு இணையான ஊக்கத்தொகைகளை வழங்கும்.  

  • இந்த முயற்சியின் மூலம், தமிழ்நாடு 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், 60,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGS) தமிழகத்திற்கு ₹2,999 கோடி நிதி ஒதுக்கீடு

  • மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) சுமார் ₹2,999 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • முந்தைய ஆண்டின் மொத்த நிலுவைத் தொகை சுமார் ₹3,170 கோடி ஆகும். ஒதுக்கப்பட்ட ₹2,851 கோடியில், பட்டியல்  வகுப்பினர் (Scheduled Castes), பழங்குடியினர் (Scheduled Tribes) மற்றும் பிற பிரிவினருக்கு முறையே சுமார் ₹740 கோடி, ₹43 கோடி மற்றும் ₹2,068 கோடி கிடைக்கும்.   
  • தமிழ்நாட்டில், 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் MGNREGS திட்டத்தில்  பங்கேற்கின்றனர். வேலைவாய்ப்பில் 86% பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் தொழிலாளர்களில் சுமார் 29% பட்டியல் சாதியினர்/பழங்குடியின (SC/ST) குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றனர்.  Source : The Hindu

காஞ்சி காமகோடி பீடத்தின்  71 வது மடாதிபதியாக ( ஆச்சார்யா ) துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட்  அபிஷேகம் செய்யப்பட்டுள்ளார். 



India (Unit III) 

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அரசியல் விவகாரக் குழு 30.04.2025 அன்று ஒப்புதல் அளித்தது.

  • மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பொறுப்பாகும். அதாவது ஒன்றிய பட்டியலில் (Union List) உள்ளது.  (அரசியலமைப்பு பிரிவு 246, ஏழாவது அட்டவணை, பட்டியல் 69).

  • 1947 முதல் ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

  • 2010: பிரதமர் மன்மோகன் சிங் ஜாதி கணக்கெடுப்பு பரிசீலனைக்கு உறுதியளித்தார்; ஆனால், சமூக-பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு (Socio-Economic and Caste Census (SECC)) மட்டுமே நடத்தப்பட்டது.


2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்திற்கான (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை  குவிண்டாலுக்கு ரூ.355/- வீதம் 10.25% அடிப்படை மீட்பு விகிதத்திற்கு வழங்க  பிரதமர்  தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


WAVES (World Audio Visual & Entertainment Summit) 2025 மும்பையில் மே 1 முதல் 4 வரை நடைபெறுகிறது. இந்திய அரசு (Government of India) முதன்முறையாக நடத்தும் இந்த  உலகளாவிய நிகழ்வு, இந்தியாவின் உயிரோட்டமான ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையை (Media & Entertainment sector) மையமாகக் கொண்டதாகும். 


மின்னணு ஆளுகை குறித்த 28-வது தேசிய கருத்தரங்கு (28th National Conference on e-Governance (NCeG))  2025 ஜூன் 9,10 ஆகிய நாட்களில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள நோவோடெலில் நடைபெற உள்ளது. 

  • இந்த நிகழ்ச்சியை மத்திய  அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

  • "வளர்ச்சியடைந்த இந்தியா: குடிமைப் பணி மற்றும் மின்னணு மாற்றம்" (“Viksit Bharat: Civil Service and Digital Transformation”) என்பது இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருப்பொருளாகும்.


ஸ்ரீ கியானேஷ்வர் குமார் சிங் (Shri Gyaneshwar Kumar Singh) இந்திய கார்ப்பரேட் விவகார நிறுவனத்தின் (Indian Institute of Corporate Affairs - IICA) புதிய இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (Director General and Chief Executive Officer) பொறுப்பேற்றுள்ளார். இந்த நிறுவனம் இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் செயல்படும் ஒரு ஆய்வு மையமாகும் (think tank).


"பாபுஜி வனம்" (Babuji Vanam) - தெலங்கானா ஆளுநர் ஹைதராபாத்தில் "பாபுஜி வனம்" (Babuji Vanam) என்ற உலகின் முதல் ஆற்றல் பரிமாற்ற தோட்டத்தை, ஸ்ரீ ராம் சந்திர மிஷன் (Shri Ram Chandra Mission) நிறுவனர் புஜ்ய பாபுஜி மகாராஜ் (Pujya Babuji Maharaj) அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவை நினைவுகூரும் பாரம்பரிய திட்டமாக தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் (Ministry of Culture) ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு (National Security Advisory Board - NSAB) மறுசீரமைப்பு :  இந்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை (National Security Advisory Board - NSAB) மறுசீரமைத்து, முன்னாள்  RAW (Research and Analysis Wing) தலைவர் அலோக் ஜோஷியை (Alok Joshi) அதன் தலைவராக நியமித்துள்ளது. 

  • மற்ற உறுப்பினர்களில் முன்னாள் மேற்கு விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா (Air Marshal PM Sinha), முன்னாள் தெற்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் (Lt Gen AK Singh), மற்றும் ரியர் அட்மிரல் மாண்டி கண்ணா (Rear Admiral Monty Khanna) ஆகியோர் இராணுவ சேவைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளாக உள்ளனர்.  

  • தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு (NSAB) என்பது அரசுக்கு வெளியில் உள்ள முக்கிய நபர்களைக் கொண்ட பலதுறை அமைப்பாகும், இது தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு (National Security Council) நீண்டகால பகுப்பாய்வு வழங்குவதையும், அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் மற்றும் கொள்கை விருப்பங்களை பரிந்துரைப்பதையும் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது.


ரஷியாவின் வெற்றி தின விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) கலந்து கொள்ள உள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா தோற்கடித்ததை நினைவுகூரும் வகையில் இந்த வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வாக மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) மே 9 அன்று நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) உள்ளிட்டோருக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (Vladimir Putin) அழைப்பு விடுத்தார். மொத்தம் 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Science  & Technology (Unit I)

ஜீனோம்இந்தியா (GenomeIndia) : ஒன்றிய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology) நிதியுதவியுடன், பல்வேறு இந்திய மக்கள் தொகுதிகளைச் சேர்ந்த 10,000+ நபர்களின் முழு ஜீனோம் வரிசைமுறை (WGS - Whole Genome Sequencing) ஆய்வை முடித்தது. இது உயிரியல் ஆராய்ச்சியை விரைவுபடுத்தவும், சுகாதார மேம்பாடுகளை உறுதி செய்யவும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது.  

  • இந்திய உயிரியல் தரவு மையம் (IBDC - Indian Biological Data Center) மார்ச் 2020 இல் நிறுவப்பட்டது.  

  • பயோடெக்-பிரைடு வழிகாட்டுதல்கள் (Biotech-PRIDE Guidelines - 2021) மற்றும் ஃபீடு நெறிமுறைகள் (FeED Protocols) பொறுப்பான தரவு பகிர்வை உறுதி செய்கின்றன.  

  • பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஜனவரி 9, 2025 அன்று ஜீனோமிக்ஸ் தரவு மாநாட்டில் (Genomics Data Conclave) ஜீனோம்இந்தியா தரவை (GenomeIndia Data) ஆராய்ச்சியாளர்களுக்கு அர்ப்பணித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot