Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC OMR படிவம் நிரப்புவது பற்றிய வீடியோ வழிகாட்டுதல் - உரையாடல் வடிவில்

CLICK HERE TO SEE THIS CONTENT IN ENGLISH

TNPSC OMR படிவம் நிரப்புவது பற்றிய புதிய வீடியோவை 15.05.2025 அன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில்  தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்வது முதல், OMR படிவத்தை எப்படி நிரப்புவது, Do / Donts என அனைத்து விதமான தகவல்களும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை TNPSC Official Website இல் காணொளியாகக் காணலாம். வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள முழு உரையாடலும் இங்கே Transcribe செய்து உரையாடல் வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

To Watch Video at TNPSC Official Website  - Click Here 

 


Download TNPSC Latest OMR Sample Sheet with out watermark

வழிகாட்டி : ஹலோ சொல்லுடி அதிசயமா கால் பண்ற என்ன விஷயம்

மாணவர் : உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் அதான் கால் பண்ணேன் சொல்லு

வழிகாட்டி: சொல்லு

மாணவர்: நீ இப்ப டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் பாஸ் பண்ணி அரசு வேலையில இருக்க நானும் என் பிரதரும் புதுசா டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுத போறோம். நாங்க தேர்வு மையத்துல என்ன செய்யணும் எப்படி எக்ஸாம் எழுதணும் என்னென்ன விதிமுறைகளைஃபாலோ பண்ணனும் அதெல்லாம் கொஞ்சம் சொல்லேன்.

வழிகாட்டி: கவலைய விட நான் இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவேன். நீயும் அங்க வந்துரு. அங்க பேசிக்கலாம்.

மாணவர்: ஓகேடி நானும் என் பிரதரும் வந்துறோம்.

வழிகாட்டி: உனக்கு கொடுக்கிற ஹால் டிக்கெட்ல இருக்கற அறிவுரைகளை முதல்ல நல்லா படிக்கணும். அதுல குறிப்பிட்டுருக்கிற இன்ஸ்ட்ரக்ஷன்ஸ தவறாம கடைபிடிக்கணும்.

மாணவர்: கொஞ்சம் விவரமா சொல்றியா அப்பதான புரியும்.

வழிகாட்டி: தேர்வு காலையில 9:30 மணிக்கு தொடங்கும். நீ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ஹால் டிக்கெட் பிளாக் இங்க் பால் பாயிண்ட் பேனா ஹால் டிக்கெட்ல கேட்கப்பட்டிருக்கிற ஏதாவது ஒரு அடையாள ஆட்டையை எடுத்துக்கிட்டு கரெக்டா 8:30 மணிக்கு தேர்வு மையத்துல கண்டிப்பா இருக்கணும். ஹால் டிக்கெட் முன்கூட்டியே உங்களுக்கு கிடைக்கிறதால அந்த தேர்வு மையம் எங்க இருக்குன்னு முன்கூட்டியே தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லது. அதனால நீங்க எட்ட மணிக்குள்ள குறிப்பிட்ட தேர்வு மையத்துக்கு டவுட் இல்லாம போய் சேர்ந்துரலாம். நீங்க லேட்டா போயிட்டு ஆட்டோ கிடைக்கல, பஸ் கிடைக்கல, ட்ராபிக் என்ன காரணம் சொன்னாலும் உள்ள அனுமதிக்க மாட்டாங்க. சார் எக்ஸாம் எழுதணும். 30 நிமிஷத்துக்கு முன்னாடி கேட்ட கக்ளோஸ் பண்ணனும். மணி 95 ஆச்சே. சாரி சார் லேட் ஆயிடுச்சு. நான் ஒன்னும் பண்ண முடியாதுமா தேர்வாணைய உத்தரவு பண்ணிதான் நடக்க முடியும்.

மாணவர்: ஓகே அப்ப நாங்க 8:30 மணிக்கு அங்க போயிடுறோம்.

வழிகாட்டி: உள்ள போனதும் டிஸ்பளே போர்டுல இருக்கற உங்களோட ரெஜிஸ்டர்ட் நம்பரை பார்த்து உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கற அறைக்கு போயிடணும்.

மாணவர்: ஏய் தேர்வு மயத்துக்குள்ள மொபைல் போன் ஹேண்ட் பேக் இதெல்லாம் எடுத்துட்டு போலாமா? டிஜிட்டல் வாட்ச், இயர்போன், ப்ளூடூத் இதெல்லாம் எடுத்துட்டு போலாமா?

வழிகாட்டி: அலோட் இல்ல ப்ரோ. ஹேண்ட் பேக், டிஜிட்டல் வாட்ச், மொபைல் போன், கால்குலேட்டர், லேப்டாப்னு இந்த மாதிரி எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருளையும் எடுத்துட்டு போகக்கூடாது. அதெல்லாம் தேர்வு மையத்துக்குள்ள அனுமதிக்க மாட்டாங்க. உங்க சொந்த ரிஸ்க்ல தான் வெளிய வைக்கணும். அது காணாம போயிட்டா தேர்வு ஆணயமோ, தேர்வு மையமோ பொறுப்பேத்துக்க மாட்டாங்க. மீறி மொபைல் போனோ இல்ல வேற ஏதாவது தடை செய்யப்பட்ட பொருட்களோ உங்க கிட்ட இருந்து தேர்வறையில கண்டுபிடிச்சா உங்களோட விடைத்தாள் செல்லாததா ஆக்கப்படும். அதுமட்டும் இல்ல தேர்வு எழுதுறதுல இருந்தும் உங்கள குறிப்பிட்ட காலத்துக்கு விளக்கி வச்சிருவாங்க.

மாணவர்: ப்ளூ இங்க் பால் பாயிண்ட் பேனால எழுதலாமா?

வழிகாட்டி: இப்பதான சொன்னேன் கூடவே கூடாது. பிளாக் இங்க் பால் பாயிண்ட் பேனால மட்டும்தான் எழுதணும். வட்டத்தை கருமையாக்கணும் கை எழுத்து போடணும். பென்சில்லையோ இல்ல வேற கலர் பேனாலயோ இங்க் பேனாவையோ இல்ல ஜெல் பேனாவையோ பயன்படுத்துனா உன்னோட விடைத்தால் செல்லாததா ஆக்கப்படும்.

மாணவர்: ஓகே அப்ப ஹால் டிக்கெட் இத மட்டும் எக்ஸாம்ல எடுத்துட்டு போறோம்.

வழிகாட்டி: நீங்க உள்ள போன உடனே உங்க அரை கண்காணிப்பாளர் உங்களோட ஹால் டிக்கெட்ட பார்த்து உங்க இடத்துல உட்கார வைப்பாங்க. அங்க இருக்கற பெஞ்ச்ல உங்களோட போட்டோ, பெயர், பதிவை எண் இது எல்லாமே உங்களோடதுதானான்னு தெரிஞ்சு உட்காரணும். ஓ! தவறான இடத்துல உக்காந்தீங்கன்னா உங்களோட விடைத்தாள் செல்லாததா ஆக்கப்படும். அது மட்டும் இல்ல தேர்வு எழுதுறதுல இருந்தும் உங்கள குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கி வச்சிருவாங்க. அப்புறம் 9:00 மணிக்கு அரைக்கணப்பாளர் ஓஎம்ஆர் விடைத்தாள் கொடுப்பாங்க. அந்த விடைத்தாள்லையும் உங்களோட போட்டோ, பெயர், பதில் எண், பாடம், தேர்வு மையம் இது எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணி பார்க்கணும். இதுல ஏதாவது தவறா இருந்தாலோ அல்லது பட்டை குறியீடு அதாவது பார்கோட் சேதமா இருந்தாலோ உடனே கண்காணிப்பாளர் கிட்ட தெரிவிச்சரணும்.

மாணவர்: அந்த மாதிரி ஓஎம்ஆர் விடத்தால தவறா இருக்க வாய்ப்பு இருக்கா?

வழிகாட்டி: அப்படி தவறா இருக்க வாய்ப்பில்ல எப்போ அது ரேரா இருக்கும். ஓ சப்போஸ் மிஸ்டேக் இருந்தா அவர் முதன்மை கண்காணிப்பாளர் கிட்ட தெரியப்படுத்தி வேற ஒரு நான் பர்சனலைஸ்ட் ஓஎம்ஆர் ஆன்சர் ஷீட் கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணுவாரு. எல்லாம் சரியா இருக்க பட்சத்துல ஓஎம்ஆர் விடைத்தாள்ல ரெண்டு பக்கங்கள் இருக்கும். பக்கம் ரெண்டுல இருக்கற அறிவுரைகளை எல்லாம் படிக்கணும். தேர்வு தொடங்குறதுக்கு 15 நிமிஷத்துக்கு முன்னாடி வினாத்தாள் புக்லெட் கொடுப்பாங்க. அந்த வினாத்தாள் புக்லெட்ல ஏதாவது பேஜ் பிரிண்ட் ஆகாம விடுபட்ுருக்கா? 200 கேள்விகளும் வரிசையா பிரிண்ட் ஆகி இருக்கா? வினாத்தாள் சேதாரம் ஆகாம இருக்கா? பிரிண்ட் ஆகாம பிளாங்க் பேஜஸ் இருக்கா? இல்ல பக்கம் மாறி இருக்கான்னு எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டு அதுல எந்த பிழையும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நாலு டிஜிட் புக்லெட் நம்பரை கவனமா ஓஎம்ஆர் விடைத்தாள்ல பக்கம் ஒன்னு பகுதி ரண்டுல அதுக்குரிய இடத்தில எழுதணும்.

மாணவர்: ஒருவேளை அந்த வினாத்தாள்ல ஏதாவது குறை இருந்தா?

வழிகாட்டி: வினாத்தொகுப்பு எண்ணை ஓஎம்ஆர் விடைத்தாள்ல எழுதுறதுக்கு முன்னாடி அரைக்கணப்பாளர் கிட்ட தெரியப்படுத்தணும். அவர் வேற கொஸ்டின் புக்லெட்ட கொடுப்பாரு. அப்புறம் உங்களோட ரிஜிஸ்டர் நம்பரை வினாத்தாள்ல அதுக்குரிய இடத்துல எழுதணும்.

மாணவர்: கொஸ்டின் பேப்பர்ல பிரிண்ட் மிஸ்டேக் எல்லாம் இருக்குமா?

வழிகாட்டி: அப்படி இருக்கறதுக்கு வாய்ப்பே இல்ல. இருந்தாலும் நாம செக் பண்ணிக்கணும். ஏன்னா நம்ம முன்னாடிதான் கொஸ்டின் பாக்கெட்டயே ஓபன் பண்ணுவாங்க. கொஸ்டின் புக்லேட் நம்பரை எழுதிட்டு அந்த எண்ணுக்குரிய வட்டத்த கருப்புமை பால் பாயிண்ட் பேனாவால தவறாம கருமையாக்கணும். அப்புறம் பக்கம் ஒன்னு பகுதி இரண்டுல ஓஎம்ஆர் விடைத்தாளோட பக்கம் இரண்டுல உள்ள அறிவுரைகளை படிச்சு அறிந்து கொண்டேன். மேலும் ஓஎம்ஆர் விடைத்தாள்ல உள்ள அனைத்து விவரங்களும் கருமையாக்கப்பட்ட வினாத்தாள் தொகுப்பு எண் உட்பட என்னால் சரி பார்க்கப்பட்டது அப்படிங்கிற கட்டத்துக்குள்ள நீங்க தேர்வு எழுதுறதுக்கு முன்னாடி கண்டிப்பா கையெழுத்து போடணும்.

மாணவர்: கையெழுத்து போடாம விட்டா என்ன ஆகும்?

வழிகாட்டி: உங்களோட விடைத்தாள் செல்லாதுதான் ஆயிடும்.

மாணவர்: அப்ப கரெக்டா கையெழுத்து போட்டறோம். வேற என்னென்ன விதிமுறைகள் இருக்கு?

வழிகாட்டி: வினாத்தொகுப்பு எண் சரியாக எழுதப்பட்டிருந்த அதற்குரிய வட்டங்கள் நிரப்பாமல் விடப்பட்டிருந்தாலோ அல்லது தவறாக நிரப்பப்பட்டிருந்தாலோ அல்லது முறையற்று நிரப்பப்பட்டிருந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் நிரப்பப்பட்டிருந்தாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்கள் நிரப்பாமல் விடப்பட்டிருந்தாலோ விடைத்தாள் செல்லாததா ஆக்கப்படும். நீங்க எந்த வட்டத்தை கருமையாக்குறீங்களோ அதுதான் இறுதியானதா இருக்கும். அப்புறம் அரை கண்காணிப்பாளர் வருகை பதிவேடு கொடுப்பாரு. அதுல உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கொஸ்டின் புக்லெட் நம்பரை எழுதி நீங்க கையெழுத்து போடணும். உங்க பெயருக்கு நேராதான் போடணும்.

மாணவர்: ஓஎம்ஆர் விடைத்தாள்ல ஏதாவது குறிச்சுக்கலாமா?

வழிகாட்டி: கூடவே கூடாது. ஓஎம்ஆர் விடைத்தாள்ல ஏதாவது குறிப்பு எழுதுறதோ இல்ல திருக்கறதோ பார்கோட் சேதப்படுத்துறதோ இந்த மாதிரி எதுவுமே பண்ணக்கூடாது. அப்படி ஏதாவது பண்ணா உங்களோட விடைத்தாள் செல்லாததா ஆயிடும்.

மாணவர்: அப்ப நம்ம கவனமா இருக்கணும்.

வழிகாட்டி: கேள்வித்தாள்ல இருக்கிற கேள்விகளையும் பதில்களையும் நல்லா படிச்சு அப்புறம் ஓஎம்ஆர் விடைத்தாள்ல இருக்கிற ஒவ்வொரு கேள்விகளுக்கும் தவறாம பதில் அளிக்கணும். நீங்க விடை அளிப்பதற்காக ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C, D, E அப்படின்னு அஞ்சு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடைக்கு உண்டான கட்டத்துல கருப்பு மை பால் பாயிண்ட் பேனாவால டார்க்கன் பண்ணனும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விடை தெரியலனா “E” ங்கிற வட்டத்தை கண்டிப்பா டார்க்கன் பண்ணனும். இதே மாதிரி கொடுக்கப்பட்ட 200 கேள்விகளுக்கும் தவறாம விடை அளிக்கணும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில் மட்டுமே விடையா இருக்கணும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களை நீங்க கருமையாக்கி இருந்தா அதுல ஒரு விடை சரியானதாவே இருந்தா கூட அந்த கேள்விக்கான விடை தவறானதாவே கருதப்படும். மதிப்பெண் வழங்கப்படாது. உதாரணத்துக்கு நீங்க பி வட்டத்தை கருமையாக்கிட்டு அது தப்பு அப்படின்னு முடிவு பண்ணி டி வட்டத்தையும் கருமையாக்கி அதை அடையாளம் காட்டுறதுக்காக அதுக்கு ஒரு ரைட் போட்டு இதுதான் சரியானது அப்படின்னு காட்டுனாலும் தவறானதாவே கருதப்படும். மார்க் வழங்கப்படாது. நீங்க விடைக்கான வட்டத்துல இந்த மாதிரி டார்க்கன் பண்ணாம இப்படி டிக் மார்க்கோ, இன்ட் மார்க்கோ, புள்ளியோ இல்ல பகுதி ஷேட் பண்ணியோ இல்ல வட்டத்துக்குள்ள வட்டம் போட்டாலோ, உங்களோட விடைத்தாள் செல்லாததா ஆயிடும். அதனால சரியான முறையில வட்டத்தை கருமையாக்குங்க. அப்படி நீங்க எந்த ஒரு கேள்விக்கும் அதற்குண்டான விடை வட்டத்தை கருமையாக்காம வெறுமையா விட்ருந்தா உங்களோட மொத்த மதிப்பெண்ல இருந்து 0.5 குறைக்கப்படும்.

மாணவர்: எல்லா கேள்விக்கும் விடை அளிச்சதுக்கு அப்புறம் ஓஎம்ஆர் விடைத்தால எக்ஸாம் ஹால்ல வச்சிட்டு வந்துரலாமா?

வழிகாட்டி: அப்படி எல்லாம் வரக்கூடாது. எக்ஸாம் முடியற வரைக்கும் எக்ஸாம் ஹால்ல தான் இருக்கணும். இன்னும் ஓஎம்ஆர் விடைத்தாள்ல நீங்க செய்ய வேண்டியது நிறைய இருக்கு. எல்லா கேள்விகளுக்கும் ஓஎம்ஆர் விடைத்தாள்ல முறையா விடை அளிச்சதுக்கு அப்புறம் பக்கம் ஒன்னு வரிசை எண் நாள்ல 200 வினாக்களுக்கும் அது தொடர்பான விடைக்குரிய வட்டத்தை கருமையாக்கி விட்டீர்களா அப்படின்னு கேட்கப்பட்டிருக்கம். எல்லா கேள்விகளுக்கும் விடை அளிச்சிருந்தா எஸ் என்ற வட்டத்தை கருமையாக்கணும். ஏதாவது கேள்விக்குரிய வட்டத்தை கருமையாக்காம விடப்பட்டிருந்தா நோங்கிற வட்டத்தை கருமையாக்கணும்.

மாணவர்: அதான் விடை தெரியலனா “E” ங்கிற வட்டத்தை கருமையாக்குறோமே அப்புறம் எப்படி விடுபடும்?

வழிகாட்டி: “E” வட்டத்தை கருமையாக்கி இருந்தா எல்லா கேள்விக்கும் பதில் இருக்கும். ஒருவேளை கருமையாக்காம விட்ருந்தா எத்தனை கேள்விகளுக்கு பதில் அளிக்கல அப்படிங்கறத பார்த்து அதற்குரிய பாக்ஸ்ல கட்டாயம் குறிப்பிடணும். உதாரணத்துக்கு நீங்க ரெண்டு கேள்விக்கு பதில் அளிக்கலன்னா நம்பரால ரெண்டுன்னு எழுதணும். அதுக்கப்புறம் ஓஎம்ஆர் விடைத்தாள்ல உங்களோட இடது கை பெருவிரல் ரேகைய பக்கம் ஒன்னு வரிசை எண் அஞ்சில அதுக்குன்னு ஒதுக்கப்பட்ட இடத்துல பதிவு செய்யணும். விரல் ரேகையை பதிவு செஞ்சதுக்கு அப்புறம் அந்த மை ஓஎம்ஆர் விடைத்தாளோட எந்த பகுதியிலயும் பட்டுடாம பாத்துக்கணும். ஒருவேள விடைத்தால நம்ம கைரேகையா நீங்க வாங்கின மொத்த மதிப்பெண்ல இருந்து 0.5 மதிப்பெண் குறைக்கப்படும். அதனால மறக்காம ஓஎம்ஆர் விடைத்தாள்ல உங்களோட விரல் ரேகைய பதிவு செஞ்சுருங்க உங்க விடைத்தாள்ல நீங்க குறிப்பிட்டுருக்கற அனைத்து விவரங்களுக்கும் நீங்கதான் பொறுப்பாவிங்க அதனால கவனமா விவரங்களை பூர்த்தி செய்யுங்க தேர்வு முடிஞ்சதுக்கு அப்புறம் உங்களோட ஓஎம்ஆர் விடைத்தாளை கண்காணிப்பாளர் கிட்ட ஒப்படைச்சிட்டுதான் போகணும். உங்க விடைத்தாளை அவர்கிட்ட ஒப்படைக்கும் போது விடைத்தாளை ஒப்படைச்சிட்டேன் அப்படின்றதுக்கு சான்றாக திரும்பவும் வருகை பதிவேட்ல ஒரு கையெழுத்து போடணும். கண்காணிப்பாளரிடம் ஓஎம்ஆர் விடைத்தாளை ஒப்படைக்கறதுக்கு முன்னாடி கையெழுத்து போட்டிருக்கோமா, கைரேகை பதிவு பண்ணியிருக்கோமான்னு ஒரு தடவை உறுதி பண்ணிக்கணும். எல்லாம் சரியா இருக்குன்னு செக் பண்ணிட்டு விடைத்தாளை குடுத்துடு.

மாணவர் : ஓகே, அதெல்லாம் செக் பண்ணி குடுத்துடறோம். வேற எதாவது மறந்துட்டோமா?

வழிகாட்டி: ஆமாம், ஒரு முக்கியமான விஷயம். ஓஎம்ஆர் விடைத்தாள்ல எந்த இடத்துலயும் தேவையில்லாம கிறுக்கவோ, ஏதாவது மார்க் பண்ணவோ கூடாது. பார்கோடு பகுதியை தொடவே கூடாது. அப்படி ஏதாவது பண்ணா, உன் விடைத்தாள் செல்லாததா ஆயிடும். மறுபடியும் சொல்றேன், கருப்பு மை பால் பாயிண்ட் பேனா மட்டும்தான் யூஸ் பண்ணு. வேற எந்த பேனாவும் வேண்டாம்.

மாணவர்: சரி, எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் விடைத்தாளை குடுத்துட்டு உடனே வெளிய வரலாமா?

வழிகாட்டி: இல்ல ப்ரோ, எக்ஸாம் முடியற வரைக்கும் ஹால்லயே இருக்கணும். கண்காணிப்பாளர் சொல்லித்தான் வெளிய வரணும். நீ விடைத்தாளை ஒப்படைச்சப்போ, வருகை பதிவேட்ல ஒரு கையெழுத்து போடணும், அதையும் மறக்காத. அப்புறம் உன் ஹால் டிக்கெட்டையும் எடுத்துக்கிட்டு கவனமா வெளிய வா.

மாணவர்: ஒரு டவுட், எக்ஸாம்ல நெகட்டிவ் மார்க்கிங் இருக்கா?

வழிகாட்டி: பொதுவா டிஎன்பிஎஸ்சி எக்ஸாம்ல நெகட்டிவ் மார்க்கிங் இருக்காது. அதனால, உனக்கு பதில் தெரியலைன்னா, E  வட்டத்தை கருமையாக்கு. ஆனா, முடிஞ்ச அளவு எல்லா கேள்விக்கும் பதில் கொடுக்க முயற்சி பண்ணு. ஒரு வேளை கேள்விய விட்டுட்டா, மொத்த மார்க்ல இருந்து 0.5 குறைப்பாங்க, அதனால கவனமா இரு.

மாணவர்: ஓகே, இப்போ புரிஞ்சுது. வேற எதாவது டிப்ஸ் இருக்கா?

வழிகாட்டி: ஆமாம், எக்ஸாம் ஹால்ல பதட்டப்படாம இரு.  கேள்வித்தாள் மேல இருக்கற இன்ஸ்ட்ரக்ஷன்ஸை முதல்ல நல்லா படி. நேரத்தை சரியா மேனேஜ் பண்ணு. முதல்ல உனக்கு தெரிஞ்ச கேள்விகளுக்கு பதில் குடு, அப்புறம் சந்தேகமானவற்றுக்கு நேரம் ஒதுக்கி யோசி. எல்லாத்தையும் ரெண்டு தடவை செக் பண்ணு, குறிப்பா விடைத்தாள்ல கருமையாக்கின வட்டங்கள் சரியா இருக்கான்னு.

மாணவர்: சூப்பர், ரொம்ப தெளிவா சொல்லிட்ட. நீ சொன்னதெல்லாம் நல்லா புரிஞ்சுது, சுகன்யா. தேங்க்ஸ் டி!  

வழிகாட்டி:  ஹா, பரவால்லை! நீயும் உன் பிரதரும் கவனமா எக்ஸாம் எழுது. எல்லாம் சரியா பண்ணி, அரசு வேலை வாங்கிடுவீங்க. ஆல் தி பெஸ்ட், ப்ரோ!

மாணவர்: தேங்க்ஸ், கண்டிப்பா ட்ரை பண்ணுவோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot