Skip to main content
குரூப் I, II 2020 (New Syllabus) Test Batch - Admission Going On !

☞30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள் | GS-175 + APTITUDE-25 )
☞தமிழ் & ENGLISH MEDIUMS | Online & PDF

Join Now Tamil Medium English Medium

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 11,12 மார்ச் 2018


TNPSC Current Affairs in Tamil - 11,12 March 2018

தமிழகம்

v  குரங்கனி காட்டு தீ  விபத்து : தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும்.  குரங்கணி வனப்பகுதியில் 11-03-2018 அன்று பிடித்த தீயில்  மலையேற்ற பயிற்சிக்கு  சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்தியா

v  குடிமக்கள் சேவைகள்மொபைல் செயலி (“Citizen Services” Mobile APP) : தேசிய கிரிமினல் ஆவணங்கள் அலுவலகத்தின் (National Crime Records Bureau (NCRB)) 33 வது நிறுவன தினத்தையொட்டி, அவ்வமைப்பு  வெளியிட்டுள்ள மொபைல் செயலி.
v  ஐ.டி.பி. பெர்லின் கண்காட்சியில் இந்தியாவிற்கு "சிறந்த கண்காட்சி விருது" (Best Exhibitor Award) :  ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் 2018 மார்ச் 7 முதல் 10 வரை நடைபெற்ற  ஐ.டி.பி. - பெர்லின் உலக சுற்றுலா சந்திப்பு” (ITB- Berlin World Tourist Meet) இல் இந்தியாவிற்கு "சிறந்த கண்காட்சி விருது" (Best Exhibitor Award)  வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதிநிதிகளாக மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. கே. ஜே. அல்போன்ஸ் இக்கண்காட்சியில் பங்கேற்றார். இந்தியாவின் இன்கிரிடிபிள் இந்தியா (மத்திய சுற்றுலா அமைச்சகம்) சார்பில் யோகி இன் தி ரேஸ்டிராக்” (Yogi of the Racetrack) என்ற குறும்படம் திரையிடப்பட்டது. 
v  எக்ஸ் சம்வேத்னா” (Ex Samvedna) - என்ற பெயரில்  இந்திய விமானப்படையின் தென் மண்டல கமாண்டின்       இராணுவப் பயிற்சி 12-17 மார்ச் 2018 ஆகிய தினங்களில் நடைபெற்றது.   சம்வேத்னாஎன்பதற்கு பரிவு” (empathy) என்று பொருள்படும்.
v  மிலான் 2018” (MILAN 2018) என்ற பெயரில்  பன்னாட்டு கடற்படை கூட்டு இராணுவப்பயிற்சியானது கடல்களில் நட்பு” (Friendship Across the Seas) எனும் கருத்தாக்கத்தில், அந்தமான் நிக்கோபார் தீவிலுள்ள போர்ட் பிளேரில் நடைபெற்றது.  1995 ஆம் ஆண்டு முதல்  ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் இப்பயிற்சியில் இவ்வாண்டு ஆஸ்திரேலியாம் வங்காளதேசம், இந்தோனேசியா, மலேசியா , மியான்மர், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் தாய்லாந்து நாடுகள் பங்கேற்றன.
v  100 % சூரிய ஆற்றல் திறன் (Solar Energy Efficieny) கொண்ட, இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் எனும் நிலையை டையு” (Diu) அடைந்துள்ளது.
v  எண்டெக்2018” ( enTTech 2018 ) எனும் பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் சந்தை (Media & Entertainment Services Market ) 07-03-2018 அன்று மும்பையில் துவங்கி வைக்கப்பட்டது.
v  ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலராக சுரேஷ் பையாஜி ஜோஷி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
v  பெங்களூருவிலுள்ள பனஸ்வாடி” (Banaswadi )  - தென் மேற்கு இரயில்வேயின் முதல் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் இரயில் நிலையம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.


வெளிநாட்டு உறவுகள்

v  முதலாவது இந்திய - பிரான்ஸ் அறிவுக் கூடுகை (Indo-French Knowledge Summit)  புது தில்லியில் 11-03-2018 நடைபெற்றது.
v  குடியரசுத் தலைவர்  திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள், 11-03-2018 அன்று  மொரீஷியஸ் மற்றும் மடகாஸ்கர் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். 
v  இந்தியா - பங்காளதேச நாடுகளுக்கிடையேயான  8.3 கி.மீ எல்லைப்பகுதி முதல் முறையாக குற்றமற்ற பகுதியாக(crime-free zone) அறிவிக்கப்பட்டுள்ளது.     
v  இந்தியா-பிரான்ஸ் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் :  பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் முன்னிலையில் இந்தியாபிரான்ஸ் இடையே ராணுவம், அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, சுற்றுச்சூழல், நகர்ப்புற மேம்பாடு, ரெயில்வே துறைகள் உள்பட மொத்தம் 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
v  சர்வதேச சூரிய மின்சக்தி நாடுகள் கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) முதல் மாநாடு புது தில்லியில் 11-03-2018 அன்று நடைபெற்றது. 121 நாடுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டமைப்பு, மோடியின் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவும், பிரான்ஸýம் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, வங்கதேச அதிபர் அப்துல் ஹமீம் உள்ளிட்ட 23 நாடுகளின் தலைவர்கள், 10 நாடுகளின் அமைச்சரவைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.   இந்த கூட்டத்தில், 15 நாடுகளில் செயல்படுத்தப்படவிருக்கும் 27 சூரிய மின் சக்தி திட்டங்களுக்கு கடனுதவியாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. 
v  ஈஸ்டோனியா குடியரசு” (Republic of Estonia) நாட்டின் கெளரவ தூதரகம் சென்னையில் 10-03-2018 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதாரம்

v  ஐரோப்பிய முதலீட்டு வங்கி (European Investment Bank (EIB)) மற்றும் இந்திய புதுப்பிக்கவல்ல ஆற்றல் மேம்பாட்டு குழுமம் (Indian Renewable Energy Development Agency (IREDA) Ltd. ) இடையே  150 மில்லியன் யூரோ கடனுதவி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்த  பணமானது, இந்தியாவில் பல்வேறு புதுப்பிக்கவல்ல ஆற்றல் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
v  ஜிஎஸ்டி இணையவழி ரசீது முறை (E-waybill)  ஏப்ரல் 1 முதல் அமலாக்கம்: சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள்பட்ட சரக்குகளை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்லும்போது, இணையவழி ரசீது (இ வே பில்) பதிவு செய்யும் நடைமுறையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

முக்கிய தினங்கள்

v  மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை உதய தினம் (Raising Day of Central Industrial Security Force) -  மார்ச் 10 அன்று கொண்டாடப்பட்டது.  இந்த நாளில் தான் 1969 ஆம் ஆண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை  உருவாக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

அறிவியல் தொழில்நுட்பம்

v  ஈசிக்ளோட்ஸ் கவிஷிமா” (Eucyclodes gavissima) எனும் பெயரில் புது வகையான பட்டாம் பூச்சிஇனம், ஆந்திர மாநிலத்திலுள்ள பாப்பிகொண்டா தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
v  "கின்ஷால் ஏவுகணை” (Kinzhal hypersonic missile) ஒலியின் வேகத்தை விட சுமார் பத்து மடங்கு அதிக வேகத்தில் சென்று தாக்கக் கூடிய கின்ஷால்ஏவுகணையை ரஷியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.          

 விளையாட்டுகள் 

v  டேக்வாண்டோ வீரர்கள், 'கின்னஸ்' சாதனை : தர்மபுரியில், ஒரே இடத்தில், 1,430 டேக்வாண்டோ வீரர்கள் பங்கேற்று, 'கின்னஸ்' சாதனை படைத்தனர்.  இவர்கள், 12 நிமிடங்கள், 40 வினாடிகள் ஒன்றாக, டேக்வாண்டோ தற்காப்பு கலை சாகசம் புரிந்தனர்.
v  45 வது டியோதார் டிராபி 2018” (Deodhar Trophy 2018) கிரிக்கெட் போட்டியில்  இந்தியா-பி அணி (India B), கர்நாடகா அணியை தோற்கடித்து வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
v  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - அகில் ஷியோரனுக்கு தங்கம் : மெக்ஸிகோவில் நடைபெறும்  உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே தங்கம் வென்ற 4-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றுள்ளார்.   இப்போட்டியில் இந்தியாவுக்கு இது 5-ஆவது தங்கமாகும். போட்டி நிறைவில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ய வாய்ப்புள்ளது. அது நிகழும் பட்சத்தில், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
v  சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவுக்கு 5-ஆவது இடம் :  மலேசியாவின் இபோ நகரில்  நடைபெற்ற  சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில்,  இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.  இப்போட்டியில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றன.படியுங்கள் !     பகிருங்கள் !         வெற்றி பெறுங்கள் ! 


Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments