Skip to main content
குரூப் 2A 2019 Test Batch Admission Going On ! TNPSC General English Book - Buy Now

TNPSC Current Affairs 20 December 2018 | நடப்பு நிகழ்வுகள் 20 டிசம்பர் 2018

Current Affairs 20-12-2018
☞   Previous Days' Current Affairs Notes
☞  Today / Previous Days' Current Affairs Quiz
இந்தியா
 • வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் 19-12-2018 அன்று  நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. 
  • வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கம். அதேநேரத்தில் நவீன மருத்துவ அறிவியலைப் பயன்படுத்தி, குழந்தைப் பேறு இல்லாத தம்பதி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. 
  • வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிற தம்பதியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மலட்டுத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும். குழந்தை பெற்றுத்தர வாடகைத்தாயாக அமர்த்தப்படுகிற பெண், கணவன்–மனைவி ஆகிய இருவரில் ஒருவரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்க வேண்டும். 
  • வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக ஒருவரை அமர்த்தக்கூடாது. அதே நேரத்தில் மருத்துவ செலவுகள், காப்பீட்டு செலவு போன்றவற்றை தரலாம்.
  • வாடகைத்தாய் முறையில், இந்திய தம்பதி மட்டுமே குழந்தை பெறலாம். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சவாளியைச் சேர்ந்தவர்கள் குழந்தைப் பெற முடியாது. மேலும், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வசிப்பவர்கள், பிரிந்து வாழும் பெற்றோர், ஓரினச்சேர்க்கையாளர் போன்றோர் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது. ஏற்கெனவே குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியும் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற முடியாது. மேலும், வாடகைத்தாய் முறையை தவறாகப் பயன்படுத்துவோருக்கு தண்டனை விதிப்பதற்கான அம்சங்களும் மசோதாவில் உள்ளன. 
 • இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் ரயில்-18 சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 29-12-2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். ரயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், நாட்டில் என்ஜினுக்காக தனிப்பெட்டி இல்லாமல் இயங்கக் கூடிய முதல் ரயிலாகும். அதிவேக ரயிலான சதாப்தி விரைவு ரயிலை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில், தில்லி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி இடையே இயக்கப்படவுள்ளது. 
  • ரயில்-18, சென்னையிலுள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்பட்டது. இதன் மொத்த செலவீன மதிப்பு ரூ.100 கோடி ஆகும். 
  • வை ஃபை, ஜிபிஎஸ் சாதன வசதி, பயோ கழிவறை, எல்இடி விளக்குகள், செல்லிடப் பேசியை சார்ஜ் செய்யும் வசதி, தட்ப வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளிட்டவை அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 • இந்தியாவின் மிகப்பெரிய கேன்சர் மருத்துவமனை , ‘தேசிய கேன்சர் நிறுவனம்’ (National Cancer Institute (NCI)) ஹரியானாவின் ஹாஜ்ஜார் (Jhajjar) எனுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. 
 • நாட்டின் முதல் தானியங்கி ஆய்வு ரயில்  சென்னை ஐ.சி.எஃப்.-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியாளர்கள் தண்டவாளத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வசதியாகவும் ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில், உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்வதற்காகவும் இந்த ஆய்வு ரயில் பயன்படுத்தப்படும்.


முக்கிய தினங்கள்

 • தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் (Minorities Rights Day in India) -டிசம்பர் 18
 • இந்தியாவில்  முதல் சித்தா தினம்  ஜனவரி 4 , 2018 அன்று  அனுசரிக்கப்பட்ட்டது.
 • தேசிய ஊட்டச்சத்து மாதம் / போசன் மாதம் (Rashtriya Poshan Maah - National Nutrition Month) :  ஆயுஷ் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சிக்கான அமைச்சகம், சுகாதாரம் குடும்ப நல அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் வழிகாட்டுதலின் பேரில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கழகங்கள் மற்றும் புற மையங்களில் செப்டம்பர் மாதம் “போஷன் மாதமாக” கொண்டாடப்பட்டது.
 • கோவா மாநில விடுதலை தினம் (Goa Liberation Day) - டிசம்பர் 19 | கோவா 19 டிசம்பர் 1961 அன்று  450 ஆண்டுகால போர்ச்சுக்கல் நாட்டின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றது. 1987 ஆம் ஆண்டு கோவா  மாநிலமாக உருவானது.புத்தகங்கள்
 • ’Changing India’ என்ற புத்தகத்தின் ஆசிர்யர் - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

நியமனங்கள்
 • மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கவரி வாரியத்தின் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) தலைவராக  பிரணாப் குமார் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுகள் 
 • ’ஐக்கிய நாடுகளவை மனித உரிமைகள் விருது 2018’  (United Nations Human Rights Prize for 2018) பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர்  (மறைந்த) ஆஸ்மா ஜஹாங்கீருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

 • ஐரோப்பிய கால்பந்தில் அதிக கோல்கள் அடித்ததற்காக 5-ஆவது முறையாக தங்கக் காலணி விருதை  பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி வென்றுள்ளார்.
Comment Policy:Dear visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation. Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.
View Comments
Close Comments