Current Affairs 19 December 2018
☞ Previous Days' Current Affairs Notes |
☞ Today / Previous Days' Current Affairs Quiz |
- கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற முதல் கட்ட ஆய்வில் ஆயிரக்கணக்கான தொன்மையான பொருள்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடுகள், கற்கோடாரிகள் உள்ளிட்டவை கிடைத்தன. அதன் தொடர்ச்சியாக இரண்டு மற்றும் மூன்றாம் கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, தமிழர் நாகரிகம் பற்றிய ஏராளமான பொருள்கள் கண்டறியப்பட்டன. அதன் பின்னர் அகழாய்வுப் பணிகள், இந்திய தொல்லியல்துறை அலுவலர் ராமன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
- இந்நிலையில், இந்திய தொல்லியல்துறையானது கீழடியில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள நிதியில்லை என்று கூறியதால் ரூ. 47 கோடி செலவில் நான்காம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கால்நடைகள் மற்றும் மனிதர்களுடையதாக இருக்கலாம் என்று கூறியுள்ள அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதையடுத்து கீழடியிலேயே கள அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
- தற்போது மத்திய அரசு, தமிழக தொல்லியல்துறைக்கு கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த அகழாய்வு ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்காக நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
- ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்யும் புதிய திட்டத்தை 17-12-2018 அன்று தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார் . இந்த திட்டமானது அங்கன்வாடி பணியாளர்கள் வழியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தியா
- ”கெய்கா யுனிட்-1” (Kaiga Unit-1) அணுமின்சக்தி உற்பத்தி அலகு (கர்நாடகா மாநிலத்திலுள்ளது) தொடர்ந்து 941 நாட்கள் தொடர்ந்து இயங்கிய உலகின் முதல் அணு உலை என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- பாலின விகிதாசார பட்டியல் 2018 (Global Gender Gap Report 2018) ல் இந்தியா 108-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
- உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum) வெளியிட்டுள்ள இந்த பாலின விகிதாசார பட்டியல் பொருளாதார வாய்ப்பு, அரசியல் அதிகாரமளித்தல், கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் உயிர்வாழ்தல் ஆகிய 4 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் ஐஸ்லாந்து 85.8 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 10-ஆவது முறையாக முதலிடத்தில் இந்நாடு உள்ளது. நார்வே 83.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஸ்வீடன் 82.2 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பின்லாந்து 4-ஆவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டிலும் 108-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- “கார்டியோமையோபதி இந்தியா” (Cardiomyopathy india) மொபைல் செயலி : மரபு வழி இதய நோய் பாதிப்புகளை அறிந்து கொள்ளவும், அதுதொடர்பான மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, இசிஜி அல்லது எக்கோ தகவல்களை பதிவேற்றம் செய்தால், அதற்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். ஃப்ரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனை மற்றும் இம்மி லைஃப் நிறுவனம் ஆகியவை இணைந்து அந்த செயலியை வடிவமைத்துள்ளன.
- 75-வது சுதந்திர தினவிழாக்காலத்தில் புதிய இந்தியாவுக்கான செயல்திட்டத்தை நிதி ஆயோக் 19.12.2018 அன்று வெளியிட்டுள்ளது. இது, 2022 – 2023-க்கு தெளிவான நோக்கங்களை விவரிக்கும் புதிய இந்தியாவுக்கான இந்த விரிவடைந்த தேசிய செயல்திட்டமாகும். இந்தியாவின் “75-வது சுதந்திர தினவிழாக்காலத்தில் புதிய இந்தியாவுக்கான செயல்திட்டம்” “கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்திற்குத் தேவைப்படும் புதிய கண்டுப்பிடிப்பு, தொழில்நுட்பம், தொழில் நிறுவனங்கள், திறமையான நிர்வாகம் ஆகியவற்றுக்கான நித்தி ஆயோக்கின் முயற்சிதான் “75-வது சுதந்திர தினவிழாக்காலத்தில் புதிய இந்தியாவுக்கான செயல்திட்டம்” ஆகும்.
- ”சிலியோ காஜா” (Silao Khaja) என்ற ஒருவகை பாரம்பரிய இனிப்பிற்கு, பீகார் மாநில அரசிற்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இனிப்பு வகையானது, பீகாரின் நாளந்தா மற்றும் இராஜகிருகம் ஆகிய புத்தமத புனித தலங்களில் புகழ்பெற்றதாகும்.
- மெயின்ஸ் தேர்வுக்காக … தூய்மை இந்தியா சார்ந்த திட்டங்கள் : http://pib.nic.in/PressReleseDetail.aspx?PRID=1556628
முக்கிய தினங்கள்
- சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day) - டிசம்பர் 18 | மையக்கருத்து (2018) - கண்ணியத்துடன் கூடிய புலம்பெயர்வு (Migration with Dignity)
விருதுகள்
- ‘பீட்டா’ (People for the Ethical Treatment of Animals (PETA)) அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் எனும் விருது (India’s person of the year) இந்தி நடிகை சோனம் கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம்
- ஜிசாட்7ஏ (GSAT-7A) செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 19-12-2018 அன்று ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி.-எப்11 (GSLV-F11) ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.
விளையாட்டுகள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது அரவிந்த் சிதம்பரம், தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.