நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 1


  1. நிற்க நேரமில்லை – என்ற தலைப்பில் சாலை இளந்திரையன் எழுதிய கவிதையானது, எந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
    1. பூத்தது மானுடம்
    2. புரட்சி முழக்கம்
    3. உரைவீச்சு
    4. காவல் துப்பாக்கி

  2. ”மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக் கோட்டம்மா” என்ற பாடலை பாடியவர்
    1. நாதமுனிகள்
    2. ஆண்டாள்
    3. அழகிய சொக்க நாதபிள்ளை
    4. குலசேகர ஆழ்வார்

  3. ”திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்” என்ற பாடலை எழுதியவர்
    1. கவிமணி
    2. பாரதிதாசன்
    3. நாமக்கல் கவிஞர்
    4. பாரதியார்

  4. முதலிலார்க்(கு) ஊதியமில்லை, மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை – என்ற குறளில் பயின்று வரும் அணி
    1. நிரல் நிரைஅணி
    2. வேற்றுமையணி
    3. எடுத்துக்காட்டு உவமையணி
    4. உவமையணி

  5. திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தாருக்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு – உலகுக்குப் பொது
    1. திரு.வி.க
    2. கி.ஆ.பெ. விசுவநாதம்
    3. அறிஞர் அண்ணா
    4. மு.வ

  6. சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயில தொடங்கினேன். எனக் கூறியவர்.
    1. அறிஞர் அண்ணா
    2. காந்தியடிகள்
    3. திரு.வி.க
    4. பாரதியார்

  7. ”ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி” என வீர முழக்கமிட்டவர்.
    1. கண்ணதாசன்
    2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    3. பாரதிதாசன்
    4. பாரதியார்

  8. பண்பெனப் படுவது பாடு அறிந்து ஒழுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்
    1. நற்றிணை
    2. கலித்தொகை
    3. குறுந்தொகை
    4. புறநானூறு

  9. பொருத்துக
    (1) வினையே ஆடவர்க்குயிர் (a) தொல்காப்பியம்
    (2) முந்நீர் வழக்கம் மகடுஉ வோடில்லை (b)குறுந்தொகை
    (3) கடலில் ஆய்ந்த ஒண்ந்திந் தமிழன் (c) திருவாசகம்
    (4) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் (d) திருமந்திரம்
    1. b a c d
    2. a c d b
    3. b c d a
    4. a b c d

  10. ”தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்” என்ற பாடலில் பயின்றுள்ள அணி
    1. நிரல் நிறை அணி
    2. இரட்டுற மொழிதல் அணி
    3. வஞ்சகப்புகழ்ச்சி அணி
    4. பிறிது மொழிதல் அணி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!