நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. ”உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி” என்ற பாடலை இயற்றியவர்
    1. மாணிக்கவாசகர்
    2. கம்பர்
    3. இளங்கோவடிகள்
    4. சீத்தலை சாத்தனார்

  2. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. கடுகை துளைத்து ஏழ்கடலை புகட்டி - திருவள்ளுவர்
    2. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் வளன் - கம்பர்
    3. செம்புலப் பெயல் நீர் போல - குறுந்தொகை
    4. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி - ஔவையார்

  3. கீழ்கண்டவற்றுள் ”வல்லின மிகு இடங்கள்”
    1. விளித்தொடரை அடுத்து வல்லினம் மிகும்
    2. வினைத்தொகையில் வல்லினம் மிகும்
    3. சால, தவ எனும் உரிச் சொற்கள் பின் வரும் வல்லினம் மிகும்
    4. இரட்டை கிளவியில் வல்லினம் மிகும்

  4. முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்
    1. தருமபுரி
    2. திருவண்ணாமலை
    3. கீழார்வெளி
    4. ஆதிச்சநல்லூர்

  5. நாமர்க்கு குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. தேவாரம்
    2. நாலாயிர திவ்ய பிரபந்தம்
    3. பெரிய புராணம்
    4. தேம்பாவணி

  6. திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது.
    1. நாமக்கல் கவிஞர்
    2. திரு.வி.க
    3. இர.பி. சேதுபிள்ளை
    4. கி.ஆ.பெ. விசுவநாதம்

  7. கீழ்கண்டவற்றில் தவறாக இடம்பெற்றவை
    1. அப்பர்
    2. தருமர்
    3. வாகீசர்
    4. தருமசேனர்

  8. Familiarity breeds contempt
    1. ஆழம் அறியாமல் காலை விடாதே
    2. இனம் இனத்தோடு சேரும்
    3. பழகப்பழகப் பாலும் புளிக்கும்
    4. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

  9. பொருத்துக
    (1) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் (a) பதிற்று பத்து
    (2) உறுமிடத் துதவா உவர் நிலம் (b) சிலப்பதிகாரம்
    (3) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் (c) புறநானூறு
    (4) நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் (d) திருமந்திரம்
    (5) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும் (e) திருக்குறள்
    (6) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த (f) திருவாசகம்
    1. b c d e f a
    2. c d e f a b
    3. a c d e f b
    4. a b c d e f

  10. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை மற்றும் விருத்தப்பாக்களின் எண்ணிக்கை
    1. 3 காண்டங்கள்,5029 பாடல்கள்
    2. 3 காண்டங்கள்,5027 பாடல்கள்
    3. 6 காண்டங்கள்,5027 பாடல்கள்
    4. 6 காண்டங்கள்,5029 பாடல்கள்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!