நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 3


  1. பொருத்துக
    (1) ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் (a) விண்ணியல் அறிவு
    (2) உறுமிடத்துத்தவா உவர் நிலம் (b) பொறியியல் அறிவு
    (3) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் (c) கனிமவியல் அறிவு
    (4) உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்தன் (d) மண்ணியல் அறிவு
    (5) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் (e) மருத்துவ அறிவு
    (6) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த (f) அறுவை மருத்துவம்
    1. d e f a b c
    2. f a b c d e
    3. d e f a b c
    4. c d e f a b

  2. ”பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. கம்பராமாயணம்
    2. சிலப்பதிகாரம்
    3. தமிழ்விடு தூது
    4. நாலாயிர திவ்யபிரபந்தம்

  3. கீழ்க்கண்டவற்றில் சரியானப் பொருத்தம்.
    1. போலிப்புலவர்கள் தலையை வெட்டுபவர் - அதிவீரராம பாண்டியன்
    2. நன்னெறிகள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
    3. போலிப்புலவர்கள் செவியை அறுப்பவர் - வில்லிப்புத்தூரார்
    4. போலிப்புலவர்கள் தலையில் குட்டுபவர் - ஒட்டக்கூத்தர்

  4. பொருத்துக
    (1) நால்வகை பாக்கள் (a) விதைகள்
    (2) பாவினங்கள் (b) நல்ல ஏர்கள்
    (3) நாற்கரணங்கள் (c) வயலின் வரப்புகள்
    (4) நன்னெறிகள் (d) மடைகள்
    1. c d b a
    2. a b c d
    3. d b a c
    4. a c d b

  5. பொருத்துக
    (1) வைதருப்பம் (a) வித்தாரக்கவி
    (2) கௌடம் (b) சித்திரக்கவி
    (3) பாஞ்சாலம் (c) மதுரகவி
    (4) மாகதம் (d) ஆசுகவி
    1. d c b a
    2. c b d a
    3. a b c d
    4. d a b c

  6. தவறாக பொருத்தப்பட்டவை
    1. நரம்பின் மறை - தொல்காப்பியம்
    2. பண்ணொடு தமிழ் ஒப்பாய் - பெரியபுராணம்
    3. தமிழ்வேலி - பரிபாடல்
    4. தமிழ்கெழு கூடல் - புறநானூறு

  7. கீழ்க்கண்டவற்றில், இயல், இசை,நாடகக் கலைஞர்களைக் குறிக்கும் பெயர்களில் தவறாக இடம் பெற்றுள்ள பெயர்
    1. பாடினி
    2. விறலி
    3. மைத்ரேயி
    4. பாணன்

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே - குறுந்தொகை
    2. கலிவெண்பாவில் பாடுவது - தூது இலக்கியம்
    3. பெண்களின் பெருவீரத்தினைப் பாடியார் - ஒக்கூர் மாசாத்தியார்
    4. ஏற்றுமதியும் இறக்குமதியும் பற்றி கூறும் நூல் - பட்டினப்பாலை

  9. பொருளல் வைரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள், என்றக் குறளில் பயின்று வரும் அணி
    1. சொற்பொருள் பின்வரு நிலையணி
    2. எடுத்துக்காட்டு உவமையணி
    3. உவமையணி
    4. சொல் பின்வருநிலையணி

  10. பொருத்துக
    (1) குன்றேறி (a) உருவகம்
    (2) செல்வச் செவிலி (b) கடைப்போலி
    (3) ஈன் குழவி (c) இரண்டாம் வேற்றுமைத் தொகை
    (4) அறன் (d) குறிப்பு வினைமுற்று
    (5) திறனறிந்து (e) வினைத்தொகை
    (6) இல்லை (f) ஏழாம் வேற்றுமைத் தொகை
    (7) வேந்தன் பொருள் (g) ஆறாம் வேற்றுமைத் தொகை
    1. c d e f a g b
    2. f a e b c d g
    3. b c d e f a g
    4. a b c d e f g



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!