நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4


  1. திருநாவுக்கரசரை” பற்றிய கூற்றுகளை ஆராய்க
    (1) திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாகீசர்
    (2) இவரது நெறி தொண்டு நெறி
    (3) தாண்டகம் பாடுவதில் வல்லவர், ஆதலால் தாண்டக வேந்தர் என அழைக்கப்டுகிறார்
    (4) இவரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு
    (5) இவர் தாம் பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகின்றது.
    1. 1,2,3,4 சரி 5 தவறு
    2. 1,3,4 சரி 2,5 தவறு
    3. 2,3,4,5 சரி 1 தவறு
    4. அனைத்தும் சரி

  2. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. செம்புலப் பெயல் நீர் போல - பதிற்றுப்பத்து
    2. வறியது நிலை இய காயமும் - புறநானூறு
    3. சரிந்த குடலைப்புத்த துறவியர் சரி செய்த செய்தி கூறும் நூல் - மணிமேகலை
    4. அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - பெருங்கதை

  3. முதுமொழிமாலை என்னும் நூலை இயற்றியவர்
    1. குலசேகர் ஆழ்வார்
    2. உமறுப்புலவர்
    3. சேக்கிழார்
    4. H.A. கிருஷ்ண பிள்ளை

  4. பொருத்துக
    (1) வைகறை (a) இரவு 2 மணி முதல் 6 மணி வரை
    (2) மாலை (b) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
    (3) யாமம் (c) பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
    (4) நண்பகல் (d) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி
    (5) காலை (e) காலை 6 மணி முதல் 10 மணி வரை
    (6) ஏற்பாடு (f) காலை 10 மணிமுதல் 2 மணி வரை
    1. a b c d e f
    2. d f e c a b
    3. b d f e c a
    4. a b d f e c

  5. பொருத்துக
    (1) குறிஞ்சி (a) ஏறுகோட்பறை
    (2) முல்லை (b) மணமுழா
    (3) மருதம் (c) துடிபறை
    (4) நெய்தல் (d) மீன்கோட்பறை
    (5) பாலை (e) தொண்டக பறை
    1. a b d c e
    2. e a b d c
    3. b d c e a
    4. a b c d e

  6. பொருத்துக
    (1) நதிபரப்பு (a) உரிச்சொற்றொடர்
    (2) வள்ளுகிர்புலி (b) உம்மைத் தொகை
    (3) கால் மடித்து (c) உவமைத்தொகை
    (4) செவிபுக (d) வியங்கோள் வினைமுற்று
    (5) தடக்கரி (e) ஏழாம் வேற்றுமை தொகை
    (6) பூதரப்புயம் (f) இரண்டாம் வேற்றுமை தொகை
    (7) சிரமுகம் (g) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    (8) புகுக (h) ஆறாம் வேற்றுமை தொகை
    1. h g f e a c b d
    2. g f e c a b d h
    3. b c d f g h a e
    4. a b c d e f g h

  7. மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது, அதனை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாக பிறருக்கு துன்பம் தராததாக இருக்க வேண்டும் என்று கூறியவர்.
    1. வள்ளலார்
    2. திரு.வி.க
    3. அறிஞர் அண்ணா
    4. காந்தியடிகள்

  8. பொருத்துக (1) வெண்பா (a) துள்ளல் ஓசை (2) ஆசிரியப்பா (b) தூங்கல் ஓசை (3) கலிப்பா (c) செப்பலோசை (4) வஞ்சிப்பா (d) அகவலோசை
    1. c b a d
    2. c d a b
    3. d b a c
    4. a d b c

  9. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. ”மானுடப்பிறப்பினுள் மாதா உதரத்து“ என்ற பாடல் கூறும் அறிவு - கருவியல் அறிவு
    2. பாரத நாடு பார்க்கெலாம் திலகம் எனப் பாடியவர் - பாரதியார்
    3. பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்கள் - 80
    4. தமிழ் மொழியே இறவாத நிலை தரும் என்றவர் – வள்ளலார்

  10. ”தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்” என்ற பாடலில் பயின்று வரும் அணி
    1. சொற்பொருள் பின்வரு நிலையணி
    2. சொல் பின்வரு நிலையணி
    3. பொருள் பின்வரு நிலையணி
    4. பிறிது மொழிதல் அணி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!