நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 12


  1. “அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு” என்ற குறளில் பயின்று வரும் அணி.
    1. ஏகாதேச உருவக அணி
    2. உவமை அணி
    3. பிறிது மொழிதல் அணி
    4. வேற்றுமை அணி

  2. நாடு, மொழி, இனம், மதம், காலம் ஆகியற்றை கடந்து நிற்கும் நூல்
    1. திருக்குறள்
    2. கம்பராமாயணம்
    3. புற நானூறு
    4. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

  3. “வணங்கி வழியொழுகி மாண்டார் சொல் கொண்டு” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. திரிகடுகம்
    2. சிறு பஞ்சமூலம்
    3. ஏலாதி
    4. பெரியபுராணம்

  4. “வீறு நடை செம்மொழி தமிழ்மொழி உலகம்” “வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி” என்று தமிழின் பெருமையை பறைசாற்றியவர்.
    1. பரிதிமாற்கலைஞர்
    2. வீரமாமுனிவர்
    3. பாவணர்
    4. பாவலர் பெருஞ்சித்திரனார்

  5. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - ஒளவையார்
    2. கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் கண்டம் - குமரிக்கண்டம்
    3. என்றுமுள தென் தமிழ் - கம்பர்
    4. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது - கெல்லட்

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. நமக்கு கிடைத்த இலக்கண நூல்களுள் மி
    2. சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் - 26350
    3. சங்க இலக்கியம் போன்று விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை - கமில்சுவலபில்
    4. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக் - கும் இலக்கணம் கூறும் நூல் - அகத்தியம் க

  7. “தமிழுக்கு கதி” என செல்வக் கேசவராய முதலியார் கூறும் நூல்கள்
    1. கம்பராமாயணம், சிலப்பதிகாரம்
    2. கம்பராமாயணம், திருக்குறள்
    3. சிலப்பதிகாரம், மணிமேகலை
    4. சிலப்பதிகாரம், திருக்குறள்

  8. பொருத்துக
    (1) இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணி பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது. (a) பாவணர்
    (2) பதினாறு செவ்வியல் தன்மை களைக்கொண்டது செம்மொழி (b) முனைவர் எமினோ
    (3) தமிழே மிகவும பண்பட்ட மொழி (c) பரிதி மாற்கலைஞர்
    (4) திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ் செம்மொழியாம் (d) மாக்சுமுல்லர்
    1. d c a b
    2. c b a d
    3. b a d c
    4. a b c d

  9. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. செம்மொழிப்பதினொரு தகுதிகோட்பாடு - பாவணர்
    2. சங்க இலக்கத்தின் வேறுபெயர் - மக்கள் இலக்கியம்
    3. நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு - 2004
    4. மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்த நூல் - திருக்குறள்

  10. பரிதிமாற்கலைஞரின் தமிழ் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்பு பட்டத்தை பரிதிமாற்கலைஞருக்கு வழங்கியவர்.
    1. பாஸ்கர சேதுபதி
    2. சி.வை.தாமோதரனார்
    3. திரு.வி.க
    4. ஆறுமுக நாவலர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!