நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 13


  1. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. Aesthetic - இயற்கை வனப்பு
    2. Instinct - இயற்கை அறிவு
    3. Order of Nature - இயற்கை ஒழுங்கு
    4. Green Rooms - பசுமை இல்லம்

  2. பரிதிமாற் கலைஞர் காலம்
    1. 1870 ஜீலை 11 முதல் 1907 நவம்பர் 03 வரை
    2. 1870 ஜீலை 6 முதல் 1903 நவம்பர் 02 வரை
    3. 1870 ஜீலை 11 முதல் 1908 நவம்பர் 03 வரை
    4. 1870 ஜீலை 6 முதல் 1903 நவம்பர் 03 வரை

  3. Too Much of anything is good for nothing
    1. பணம் பத்தும் செய்யும்
    2. தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
    3. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
    4. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

  4. “எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
    1. சிலப்பதிகாரம்
    2. நற்றிணை
    3. கம்பராமாயணம்
    4. பெரிய புராணம்

  5. பொருத்துக
    (1) பிடர்தலை பீடத்தில் ஏறிய இளங்கொடி (a) துர்க்கை
    (2) கன்னியவர் எழுவருள் இளையவள் (b) காளி
    (3) இறைவனை நடனமாட செய்தவள் (c) பத்தரகாளி
    (4) அச்சம் தரும் காட்டை தான் விரும்பும் இடமாக கொண்டவள் (d) பிடாரி
    (5) தாருகனின் மார்பை பிளந்தவள் (e) கொற்றவை
    1. e d c b a
    2. d b c e a
    3. b c d e a
    4. a b d c e

  6. “கணவனை இழந்த மகளிர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது” என்று கூறியவர்
    1. பாண்டியமன்னன்
    2. கோப்பெருந்தேவி
    3. இளங்கோவடிகள்
    4. மாதவி

  7. பொருத்துக
    (1) மடக் கொடி (a) வினைத்தொகை
    (2) தடக்கை (b) அன்மொழித்தொகை
    (3) உகுநீர் (c) ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
    (4) அவ்வூர் (d) வியங்கோள் வினைமுற்று
    (5) என்கால், என்பெயர் (e) சேய்மை சுட்டு
    (6) கெடுக (f) ஆறாம் வேற்றுமை தொகை
    (7) அடங்காப் பசுந்துணி (g) உரிச்சொற்றொடர்
    1. f g b e a d c
    2. a g d b f e d
    3. b g a e f d c
    4. a g e b f d c

  8. “தொண்டு செய்து பழத்த பழம் தூயதாடி மார்பில் விழும்” என்ற பாடலை எழுதியவர்
    1. பாரதிதாசன்
    2. நாமக்கல் கவிஞர்
    3. கவிமணி
    4. பாரதியார்

  9. ஒழுக்கம் என்பதும், கற்பு என்பதும், பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும், எனக் கூறியவர்
    1. திருவள்ளுவர்
    2. அறிஞர் அண்ணா
    3. மு. வரதராசனர்
    4. பெரியார்

  10. “வட சொல் கிளவி வட எழுத்தொரி இ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் மே” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. புறநானூறு
    2. தொல்காப்பியம்
    3. சிலப்பதிகாரம்
    4. கம்ப ராமாயணம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!