நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 20


  1. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை
    1. ஓவியக்கலை
    2. நாடகக்கலை
    3. இசைகலை
    4. பேச்சுக்கலை

  2. “அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற் படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்” என்று கூறியவர்
    1. நேரு
    2. அம்பேத்கர்
    3. ராஜேந்திர பிரசாத்
    4. காந்தி

  3. “நல்” என்று அடைமொழி கொடுத்து போற்றப்படும் நூல்
    1. நற்றிணை
    2. பதிற்று பத்து
    3. அகநானூறு
    4. புறநானூறு

  4. பொருத்துக
    (1) அரி (a) பனையோலைப் பெட்டி
    (2) செறு (b) நெற்கதிர்
    (3) யாணர் (c) வயல்
    (4) வட்டி (d) புது வருவாய்
    1. b c d a
    2. a b c d
    3. b c d a
    4. b c a d

  5. தமிழ்த்திரைப்பட உலகின் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் திகழ்ந்தவர்
    1. உடுமலை நாராயணக்கவி
    2. எ.வி. மெய்யப்பர்
    3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
    4. கண்ணதாசன்

  6. பொருத்துக
    (1) மேதி (a) பாம்பின் நஞ்சு
    (2) நிறைக் கோல் (b) திரு நீறு
    (3) மந்தமாருதசீதம் (c) நான்மறை
    (4) சூலை (d) தாமரை
    (5) கமலம் (e) குளிர்ந்த இளந்தென்றல்
    (6) மறைநூல் (f) கொடிய வயிற்றுநோய்
    (7) பூதி (g) துலாக் கோல்
    (8) பணிவிடம் (h) எருமை
    1. h g e f d c b a
    2. h g d c f b a e
    3. h g d f c d a b
    4. h g d f c b d a

  7. தம்மக்கள், அளவை, நிறைக்கோல், பசு தாம் வைத்த தண்ணீர் பந்தல் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தவர்
    1. திரு நீலக் கண்டர்
    2. மாற நாயனார்
    3. அப்பூதியடிகள்
    4. சமணமுனிவர்கள்

  8. இலக்கண குறிப்பு ;-
    (1) வழிக்கரை (a) வினைத்தொகை
    (2) நீர்த்தடம் (b) அன்மொழித் தொகை
    (3) கரகமலம் (c) இரண்டாம் வேற்றுமை தொகை
    (4) பூதி சாத்த, பெருமையறிந்து (d) உருவகம்
    (5) அங்கணர் (e) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    (6) பொங்குகடல் (f) ஆறாம் வேற்றுமைத் தொகை
    1. f e d c b a
    2. f d c b e a
    3. f e d c a b
    4. a b c d e f

  9. கீழ்கண்டவற்றில் உள்ள கூற்றை ஆராய்க
    (1) கருத்துப்படம் அமைக்க தொடங்கியவர் - வால்ட் டிஸ்னி
    (2) திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் - எதிர்சுருள்
    (3) ஈஸ்ட்மன் பவர் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டு பிடித்தார்
    (4) ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவியை எடிசன் கண்டுபிடித்தார்
    (5) எட்வர்டு மை பிரிட்சு என்பவர் ஓடும் குதிரையை இயக்கபடமாக எடுத்து வெற்றி பெற்றார்
    (6) 1830 ஆம் ஆண்டு ஒளிபடம் எடுக்கும் முறையை கண்டு பிடித்தனர்
    1. 1,2,3,4,5 சரி 6 தவறு
    2. அனைத்தும் சரி
    3. 1,2,3,4,சரி 5,6 தவறு
    4. 1,3,4,5,6 சரி 2 தவறு

  10. மு.சி.பூர்ணலிங்கம் துவங்கி வைத்த “ஞானப்போதினி” என்னும் இதழை நடத்தி வந்தவர்
    1. பெருஞ்சித்திரனார்
    2. பரிதிமாற்கலைஞர்
    3. பாரதியார்
    4. முடியரசன்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!