நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 7


  1. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம் தேர்ந்தெடு
    1. பஞ்சுரப் பண் - பாலை
    2. ஆயர், ஆச்சியர் - முல்லை
    3. செவ்வழிப்பண் - மருதம்
    4. விளரியாழ் - நெய்தல்

  2. வழக்குரை காதையானது மதுரை காண்டத்தின் எத்தனையாவது காதையாக அமைந்துள்ளது.
    1. 10 காதை
    2. 13 காதை
    3. 7 காதை
    4. 3 காதை

  3. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பெரிய புராணம் - 2 காண்டம் + 13 சருக்கம் + 4286 பாடல்கள்
    2. தேம்பாவணி - 3 காண்டம் + 36 படலங்கள் + 3618 பாடல்கள்
    3. சிலப்பதிகாரம் - 3 காண்டம் + 30 காதைகள் + 5001 பால்வரிகள்
    4. கம்பராமாயணம் - 6 காண்டம் + 118 படலங்கள் + 10589 பாடல்கள்

  4. கீழ்கண்டவற்றில் ”நற்றிணை” பற்றிய கூற்றுகளை ஆராய்க
    (1) மிளைகிழான் நல்வேட்டனார் நற்றிணையில் 4 பாடல்களையும், குறுந்தொகையில் 1 பாடலையும் பாடியுள்ளார்
    (2) நற்றிணை நூல்களில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 400 ஆகும். பாடிய புலவர்களின் எண்ணிக்கை 275 ஆகும்
    (3) நற்றிணைப் பாடலை தொகுத்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி
    1. 1,2 சரி 3 தவறு
    2. 1,3 சரி 2 தவறு
    3. 2,3 சரி 1 தவறு
    4. அனைத்தும் சரி

  5. இராமலிங்க அடிகளார்’ பற்றிய கூற்றுகளை ஆராய்க
    (1) இராமலிங்க அடிகளாரை பாரதியார் ’புது நெறிகண்ட புலவர்’ எனப் போற்றுகிறார்.
    (2) ஆறு தொகுதிகள் கொண்ட இவரது பாடல்களை திருவருட்பா என மக்கள் போற்றுகின்றனர்.
    (3) ”உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோல்” என்றார் வள்ளலார்
    (4) சாதிவேரை முளையிலேயே கிள்ளி எறிய விரும்பியவர் வள்ளலார் ஆவார்
    1. அனைத்தும் சரி
    2. 1,2 சரி 3,4 தவறு
    3. 1,3,4 சரி 2 தவறு
    4. 1,2,3 சரி 4 தவறு

  6. பிரித்தெழுதுக கீழ்கண்டவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
    1. அறனறிந்து - அறத்தை + அறிந்து
    2. செவியறுத்து - செவியை + அறுத்து
    3. எந்நாளும் - எ + நாளும்
    4. கரணத்தேர் - கரணத்து + ஏர்

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. சுனைநீர் - முல்லை
    2. மனைக்கிணறு - மருதம்
    3. மணற்கிணறு - நெய்தல்
    4. அருவி நீர் - குறிஞ்சி

  8. பிரித்து எழுதுக – கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. திண்டிறல் - திண்மை + திறல்
    2. வெள்ளெயிறு - வெண்மை + எயிறு
    3. போன்றிருந்தேன் - போன்று + இருந்து + தேன்
    4. அவ்வழி - அ + வழி

  9. முகுந்தமாலை” என்னும் நூலை இயற்றியவர்
    1. உமறுப்புலவர்
    2. பனுஅகமது மரைக்காயர்
    3. நம்மாழ்வார்
    4. குலசேகர ஆழ்வார்

  10. கீழ்கண்டவற்றில் சரியானவை தேர்ந்தெடு
    1. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
    2. இந்திர தேச சரித்திரம் என்னும் நூலை எழுதியவர் - அயோத்திய தாச பண்டிதர்
    3. வள்ளலார் திருவெற்றியூர் சிவபெருமான் மீது பாடி பாடல்கள் - தெய்வமணிமாலை
    4. ராமலிங்க அடிகளார் கந்தக்கோட்டத்து இறைவனை மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பு - வடிவுடை மாணிக்கமாலை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!