நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பத்தாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 8


  1. பொருத்துக
    (1) கான் (a) கரடி
    (2) உழுவை (b) சிங்கம்
    (3) மடங்கல் (c) புலி
    (4) எண்கு (d) காடு
    (5) மரை (e) மான்
    1. c d a b
    2. d c b a
    3. b c d a
    4. a b c d

  2. அயோத்திய தாசரின் காலம்
    1. 25.6.1845 முதல் 19.5.1914 வரை
    2. 19.5.1845 முதல் 25.6.1914 வரை
    3. 5.5.1845 முதல் 20.5.1914 வரை
    4. 20.5.1845 முதல் 5.5.1914 வரை

  3. ஆசிரியப்பா மற்றும் வெண்பாவின் வகைகள்
    1. 6, 4
    2. 4 , 6
    3. 6 , 6
    4. 4 , 4

  4. கண்ணகனார் அவர்கள் கீழ்க்கண்ட எந்த அரசருடைய அரசவையில் அவைக்களப் புலவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்
    1. முதலாம் குலோத்துங்க சோழன்
    2. வக்கபாகை ஆண்ட வரகுணப்பாண்டியன்
    3. கோப்பெருஞ்சோழன்
    4. அரிமத்தன பாண்டியன்

  5. பெரிய புராணம் நூலுக்கு சேக்கிழார் இட்டப்பெயர்
    1. திருத்தொண்டர் திருவந்தாதி
    2. திருத்தொண்டர் வரலாறு
    3. திருத்தொண்டர் பதிகம்
    4. திருத்தொண்டர் புராணம்

  6. சேக்கிழார் பெருமானை “பக்திச் சுவை நனிச் சொட்டப் சொட்ட பாடிய கவி வலவ” எனப் புகழ்ந்தவர்
    1. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
    2. பாரதியார்
    3. அழகிய சொக்கநாத புலவர்
    4. கவிமணி

  7. அரியா சனமுக்கே யானால் உனக்கும் சரியாரும் உண்டோ தமிழே” என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்
    1. தேவாரம்
    2. தமிழ் விடு தூது
    3. சீறாப்புராணம்
    4. நாலாயிர திவ்விய பிரபந்தம்

  8. ”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” – என்ற பாடலை பாடிய புலவர்
    1. மாணிக்கவாசகர்
    2. சுந்தரர்
    3. திருநாவுக்கரசர்
    4. திருஞான சம்பந்தர்

  9. சாலை இளந்திரையன் எழுதிய எந்த இரு நூல்களானது தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன.
    1. காவல் துப்பாக்கி, கேள்விகள் ஆயிரம்
    2. புதிய கல்வித் கொள்கை, நெருப்பை வளர்க்கிறார்கள்
    3. ஏழாயிரம் எரிமலைகள், தமிழுக்காக
    4. புரட்சி முழக்கம், உரைவீச்சு

  10. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. ”சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் என்றவர் - வள்ளலார்
    2. அயோத்திய தாசப் பண்டிதரின் இயற்பெயர் – காத்தமுத்து
    3. இதோ ஓர் உத்தம மனிதர் போகிறார் எனக் கூறியவர்- திகம்பர சாமியார்
    4. ஒரு பைசாத் தமிழனின் ஆசிரியர் -அயோத்தியதாச பண்டிதர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!