நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - பதினொன்றாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. பொருத்துக
    (1) வதுவை (a) ஆண்புலி
    (2) உகிர் (b) பன்றி
    (3) கேழல் (c) நகம்
    (4) உழுவை (d) திருமணம்
    1. b c d a
    2. d c b a
    3. a b c d
    4. c b a d

  2. பொருத்துக
    (1) தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு (a) வேற்றுமையணி
    (2) பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால மிகுத்தும் பெயின் (b)பிறிதுமொழிதல் அணி
    (3) கொக் கொக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து (c)எடுத்துக்காட்டு உவமையணி
    (4) பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (d) தொழிலுவமை அணி
    1. a b d c
    2. b d c a
    3. a c d b
    4. a b c d

  3. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. திருக்குறள் என்பது - அடையடுத்த கருவியாகுபெயர்
    2. இன்பத்து பாலில் அமைந்த இயல்கள் - களவியல், கற்பியல்
    3. திருவள்ளுவர் தினம் - தைதிங்கள் முதலாம் நாள்
    4. திருக்குறளை ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு- கி.பி. 1886

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. பெ.சுந்தரம் பிள்ளை காலம் - 1855 - 1897
    2. ஜீவகன் புதுவதாய் கோட்டை நிறுவிய இடம் - திருநெல்வேலி
    3. மனோன்மணியம் நாடக நூலின் ஆக்கத்திற்கு துணை நின்ற ஆங்கில நூல் - ரகசியவழி
    4. மனோன்மணியம் நூலின்கண் வரும் துணைக்கதை- சிவகாமி சபதம்

  5. பொருத்துக
    (1) விலாதத்துக்காண்டம் (a)மெக்கத்தை விட்டு பெருமனார் மதீனம் சென்றதும் தீன்நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்கள் பற்றி
    (2) நுபுவ்வத்துக் காண்டம் (b) நபிகள் நாயகம், பிறப்பு, இளமை நிகழ்வுகள், திருமணம்
    (3) ஹிஜ்ரத்துக் காண்டம் (c) வானவர் ஜிப்றாயில் மூலம் திருமறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும், அதன் பின் மக்கத்தில் நடந்தவைகள்
    (4) விடமீட்டபடலம் உள்ள காண்டம் (d) ஹிஜ்ரத்துக் காண்டம்
    1. b c a d
    2. a b c d
    3. c a b d
    4. b a c d

  6. விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ் காப்பியம்
    1. கம்பராமாயணம்
    2. மணிமேகலை
    3. சிலப்பதிகாரம்
    4. சீவகசிந்தாமணி

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. உமறுப்புலவரின் ஆசிரியர் - கடிகை முத்து புலவர்
    2. ‘சின்ன சீறா’ நூல் -- அபுல்காசிம் மரைக்காயர்
    3. முதுமொழி மாலையில் உள்ள பாக்கள் – 80
    4. உமறுப்புலவர் காலம் - கி.பி. 17ம் நூற்றாண்டு

  8. நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினையுடையதாக விளங்கும் நூல்
    1. இராம நாடகம்
    2. மனோகரம்
    3. மனோன்மணியம்
    4. நந்தனார் சரித்திரம்

  9. ”பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லாயடா ? என்று வியந்து பாடிய கவிஞர்
    1. பாரதியார்
    2. கவிமணி
    3. பாரதிதாசன்
    4. பெ. சுந்தரம்

  10. “தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே” என்று பாடியவர்
    1. கவிமணி
    2. பாரதிதாசன்
    3. கண்ணதாசன்
    4. பாரதியார்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!