நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 6


  1. வீரமா முனிவர் தமிழ்நாட்டில் சமயபணி ஆற்றிய ஆண்டுகள்
    1. 39 ஆண்டுகள்
    2. 30 ஆண்டுகள்
    3. 35 ஆண்டுகள்
    4. 37 ஆண்டுகள்

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. வீரமாமுனிவர் தமிழ் நாட்டிற்கு வந்த ஆண்டு - 1710
    2. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - ஆங்கிலம்
    3. தேம்பாவணி பாட்டுடைத்தலைவன் - சூசைமாமுனிவர்
    4. கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு - அஞ்சாமை

  3. பொருத்துக
    (1) வைவேல் (a) உரிச்சொற்றொடர்
    (2) காண்கிலர் (b) எதிர்மறை வினைமுற்று
    (3) உணர்மின் (c) ஏவல் வினைமுற்று
    (4) பொழிமறை (d) வினைத்தொகை
    1. a b c d
    2. b a d c
    3. d c b a
    4. c d a b

  4. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம், கூடில்லாத பறவை” என்று பாடியவர்
    1. பாரதிதாசன்
    2. இரசூல் கம்சதேவ்
    3. பாரதியார்
    4. வீரமாமுனிவர்

  5. “தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுத்தே” என்று தமிழர்களை தட்டி எழுப்பியவர்
    1. பாரதியார்
    2. முடியரசன்
    3. அப்துல் ரகுமான்
    4. பாரதிதாசன்

  6. கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கருதியவர்
    1. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
    2. உ.வே. சாமிநாதன்
    3. பாவணர்
    4. பரிதிமாற்கலைஞர்

  7. கீழ்கண்டவற்றில் தவறானவை தேர்ந்தெடு
    1. மதுரை கலம்பகம் பாட்டுடை தலைவன் - அருள்மிகு அங்கயற்கண்ணி உடனாய சொக்கநாத பெருமான்
    2. குமரகுருபரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு - இன்னோசை
    3. பலவகை வண்ணமும் மணமும் நிறைந்த மலர்களை தொடுத்துக் கட்டிய மாலை - கலம்பகம்
    4. பிள்ளை தமிழ் இலக்கிய வகையில் மிகசிறந்த நூல் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

  8. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்
    1. நந்திக் கலம்பகம்
    2. காசிக் கலம்பகம்
    3. திருவாரூர் கலம்பகம்
    4. மதுரை கலம்பகம்

  9. “பழமை பழமை யென்று பாவனை பேச லன்றி என்ற பாடலை பாடியவர்
    1. பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
    2. பாரதிதாசன்
    3. பாரதியார்
    4. முடியரசன்

  10. “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற பாடலை பாடியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. நாமக்கல் கவிஞர்
    4. கவிமணி



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!