நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - எட்டாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆனது. கற்பார்க்கு மனத்தூய்மை, பத்திச்சுவை ஆகியஊட்டும் நூல்.
    1. இனியவை நாற்பது.
    2. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
    3. திருக்குறள்
    4. புறநானூறு

  2. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க.
    1 உருசிய நாட்டின் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
    2 இத்தாலி நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
    1. 1 சரி 2 தவறு
    2. 2 சரி 1 தவறு
    3. 1,2 தவறு
    4. 1,2 சரி

  3. கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
    1. திருக்குறயின் பெருமையை விளக்கும் நூல் - திருவள்ளுவர் மாலை
    2. திருக்குறள் - பதிணென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
    3. திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்தவர் - ஜி.யு.போப்
    4. வள்ளுவனைப் பெற்றதால் புகழ்வையகமே - பாரதிதாசன்

  4. அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள்
    1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
    2. நாவில்தோறும் நூல் நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளன் தொடர்பு
    3. செயற்கறிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு
    4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்

  5. வீரமானிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார் எனக் கூறியவர்
    1. ரா. பி. சேதுபிள்ளை
    2. மு.வ
    3. திரு.வி.க
    4. அண்ணா

  6. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. கதம்ப மாலை – தேம்பாவணி
    2. பொன் நூல் – தென்னூல் விளக்கம்
    3. முத்தாரம் – சதுரகராதி
    4. வாடாத மாலை – கலம்பகம்

  7. ”மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும்” என புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்
    1. தோப்பில் முகமது மீரன்
    2. குணங்குடி மஸ்தான்
    3. வீரமாமுனிவர்
    4. கால்டுவெல்

  8. பொருத்துக

    (1) 5 (a) ரு
    (2) 7 (b) எ
    (3) 9 (c) கூ
    (4) 4 (d) ௪
    1. d a b c
    2. d c b a
    3. a b c d
    4. d b c a

  9. ”புதியதோர் உலகு செய்வோம்” என்ற பாடலை எழுதியவர்
    1. பாரதிதாசன்
    2. பாரதியார்
    3. நாமக்கல் கவிஞர்
    4. சுரதா

  10. “முத்த பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே” என்ற பாடலை பாடியவர்
    1. கவிமணி
    2. தாயுமானவர்
    3. திரு.வி.க
    4. வீரமாமுனிவர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!