நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 14


  1. “உமர்கய்யம்“ பற்றிய தவறான கூற்றுகளை கண்டறிக
    (a) இவர் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக்க் கவிஞர்
    (b) இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமை மிக்கவர்
    (c) இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை
    1. 1,2 சரி 3 தவறு
    2. 1,3 சரி 2 தவறு
    3. 2,3 சரி 1 தவறு
    4. அனைத்தும் சரி

  2. பொருத்துக
    (1) வெஃகல் (a) பெருவிருப்பம்
    (2) வெகுளல் (b) கடுஞ்சினம்
    (3) பொல்லாக்காட்சி (c) ஒழுக்கம்
    (4) சீலம் (d) தோழியர் கூட்டம்
    (5) நாத்தொலைவில்லை (e) மாயத்தோற்றம்
    (6) ஆயம் (f) சொல்சோர்வின்மை
    1. a b e c f d
    2. b a d c f e
    3. b f d c e a
    4. b e f c d a

  3. “நல் வினையென்பது யாதென வினவின்“ சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்
    1. உமர்கய்யாம் பாடல்கள்
    2. மணிமேகலை
    3. முத்தொள்ளாயிரம்
    4. கலிங்கத்து பரணி

  4. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ எனக் கூறும் நூல்கள்
    1. புறநானூறு, சிலப்பதிகாரம்
    2. புறநானூறு, பரிபாடல்
    3. புறநானூறு, குறுந்தொகை
    4. புறநானூறு, மணிமேகலை

  5. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே - திருமூலர்
    2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - தொல்காப்பியர்
    3. காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் - கவிமணி
    4. மீதூண் விரும்பேல் - ஒளைவையார்

  6. பொருத்துக
    (1) கண்ணோட்டம் (a) உருவகம்
    (2) இன்ப சொரூபம் (b) தொழிற்பெயர்
    (3) நாழி (c) தன்மைப் பன்மை வினைமுற்று
    (4) தூய்ப்போம் (d) ஆகுப்பெயர்
    1. b a d c
    2. a b c d
    3. b c d a
    4. a b d c

  7. பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் என்ற குறளில் பயின்று வரும் அணி
    1. வேற்றுப்பொருள் அணி
    2. நிரல் நிரை அணி
    3. உவம்மையணி
    4. ஏகசேச உருவக அணி

  8. தளை, அடி, தொடை எத்தனை வகைப்படும்
    1. 7,8,5
    2. 7,5,8
    3. 5,8,7
    4. 7,5,7

  9. பொருத்துக
    (1) இணை மோனை (a) (1,3,4)
    (2) பொழிப்பு மோனை (b) (1,2,3,4)
    (3) ஒரூஉ மோனை (c) (1,2,4)
    (4) கூழை மோனை (d) (1,2,3)
    (5) மேற்கதுவாய் மோனை (e) (1,3)
    (6) கீழ்க்கதுவாய் மோனை (f) (1,4)
    (7) முற்று மோனை (g) (1,2)
    1. g f d c e a b
    2. g a c d e f b
    3. g e f d a c b
    4. g f d a c e b

  10. நாமக்கல் வெ.ராமலிங்கனார் பற்றிய கூற்றுகளை ஆராய்க
    (1) தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர்
    (2) நடுவணரசு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது
    (3) தமிழக மக்களால் காந்திய கவிஞர் என அழைக்கப்பட்டவர்
    (4) காலம் கி.பி. 1888 – 1972
    1. 1,2,3,4 சரி
    2. 1.2.3 சரி 4 தவறு
    3. 1,4,3 சரி 2 தவறு
    4. 1,2 சரி 3,4 தவறு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!