நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 15


  1. தில்லையடி வள்ளியம்மை பற்றிய கூற்று ஆராய்க
    (1) காலம் - 1898 முதல் 1914 வரை
    (2) 1913ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
    (3) கோ-ஆப்-டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் சென்னையிலுள்ள தனது 660 விற்பனை மையத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை மாளிகை எனப் பெயர் சூட்டி பெருமைபடுத்தி உள்ளது
    1. 1,3 சரி 2 தவறு
    2. 1,2 சரி 3 தவறு
    3. அனைத்தும் தவறு
    4. 2,3 சரி 1 தவறு

  2. தீவினைகள் குறித்த கீழ்கண்ட இணைகளை ஆய்க.
    (1) உடலில் தோன்றுவது - கொலை, களவு, காமம்
    (2) சொல்லில் தோன்றுவது - பொய் பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்ற சொல்
    (3) உள்ளத்தில் தோன்றுகூது - பெருவிருப்பம், கடுஞ்சினம், பொல்லாக்காட்சி
    1. 1,2 சரி 3 தவறு
    2. 1 சரி 2,3 தவறு
    3. 3 சரி 1,2 தவறு
    4. அனைத்தும் சரி

  3. "தமிழ் ஒன்றே தமிழரை பிணைத்த ஒற்றுமைப்படுத்தவல்லது தமிழாட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிர தமிழுக்கு எதிர்காலம் இல்லை", எனக் கூறியவர்
    1. மொழியியல் அறிஞர் ச. அகத்தியலிங்கம்
    2. திரு.வி.க
    3. அறிஞர் அண்ணா
    4. மு.வரதராசனார்

  4. கீழ்கண்டவற்றுள் “வல்லினம் மிகும் இடங்கள்“
    1. இரட்டை கிளவியில் வல்லினம் மிகும்
    2. எழுவாய் தொடரில் வல்லினம் மிகும்
    3. இரண்டாம் வேற்றுமை விரி, நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
    4. அது, இது, அவை, இவை என்றும் சுட்டுசொற்களில் வல்லினம் மிகும்

  5. கீழ்கண்டவற்றுள் “வல்லினம் மிகா இடங்கள்.
    1. அந்த, இந்த, என்னும் சுட்டும் வினா சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
    2. பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகாது
    3. வன்தொடர் குற்றியலுகரத்த்தின் வல்லினம் மிகாது
    4. முற்றிலுகரத்தின் வல்லினம் மிகாது

  6. கலிங்கத்து பரணியில் எத்தனை தாழிசைகள் உள்ளன
    1. 599
    2. 509
    3. 590
    4. 508

  7. “செயங்கொண்டாரை“ பரணிக்கோர் செயங்கொண்டார் என பாராட்டியவர்
    1. ஒட்டக்கூத்தர்
    2. அண்ணா
    3. கம்பர்
    4. பலபட்டைச் சொக்கநாதர்

  8. கலிங்கத்து பரணியை “தென்தமிழ்த் தெய்வப் பரணி“ என புகழ்ந்தவர்
    1. பலபட்டைச் சொக்க நாதர்
    2. அண்ணா
    3. ஒட்டக்கூத்தர்
    4. ஜெயங்கொண்டார்

  9. திரு.வி.க. எழுதிய உரைநடை நூல்
    1. முருகன் அருள் வேட்டல்
    2. முருகன் அல்லது அழகு
    3. மார்க்சியமும் காந்தியமும்
    4. பொதுமை வேட்டல்

  10. பொருள், இடத்திற்கு ஆகி வருவது
    1. தானியாகு பெயர்
    2. இடவாகுபெயர்
    3. கருவியாகுபெயர்
    4. கருத்தாவாகுபெயர்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!